முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > கொட்டகலையில் கோட்டாபாய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம்

கொட்டகலையில் கோட்டாபாய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் கொட்டகலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மக்கள் அலையென திரண்டு வந்து தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச சபை மைதானத்தில் 12.11.2019 (செவ்வாய்க்கிழமை) இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், எஸ்.பீ.திஸாநாயக்க, சீ.பீ.ரத்நாயக்க, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், மத்திய மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.ரமேஷ்வரன் மற்றும் ஊவா மாகாண சபை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!