முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படும்! கொட்டகலையில் கோத்தபாய தெரிவிப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்படும்! கொட்டகலையில் கோத்தபாய தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் நாம் வெற்றிபெற்றவூடன் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவூம் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தபடுமென ஸ்ரீலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உறுதி வழங்கியூள்ளார்.

12.11.2019 செவ்வாய்கிழமை இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஏற்பாட்டில் கொட்டகலை விளையாட்டு மைதனத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மலையகத்தின் அபிவிருத்திகள் கடந்த நான்ங்கரை வருடகாலமாக மந்த கதியில் கானப்பட்டு வருகிறது ஆகவே எமது அரசாங்கம் உருவாகிய பிறகு மலையகததில் உள்ள வீதிகள் புனரமைப்பு மற்றும் மலையகத்திற்கான பல்கலைகழகம்
அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கபடும் மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் நாம் நன்கு அறிவோம் ஆகையால் தான் நாங்கள் உங்களின் வாழ்வதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ள மாணவர்கள் இன்று பல்கலைகழகம் செல்லுவது அதிகரித்து விட்டது ஆகையால் நாங்கள் மலையகத்தில் புதிய பல்கலைகழம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மலையகத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை அதிகரிக்க நடவடிக்கை முன்னெடுக்கபடும் கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் போன்ற பாடங்களில் மலையக மாணவர்கள் தேர்ச்சிபெற்ற விசேடமாக பயிற்றுவிக்கபட்ட ஆசிரியர்கள் நியமிக்கபடும் பெருந்தோட்ட தொழிலாளர்களால் பறிக்கபடும் தேயிலைக்கு சிறந்த விலையினை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கபடும் சிலர் மலையக பகுதிக்கு வந்து வாக்குறுதி வழங்குவார்கள் வீடுகள் அமைத்து தருவதாக
மலையக மக்களுக்கு இதுவரையிலும் முறையான வீடமைப்பு திட்டம் பெற்று கொடுக்கபட வில்லை.

மஹிந்த அரசாங்கத்தின் போது இந்த கொட்டகலை நகரத்தை பாரிய அளவில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன் இன்று முழு நாட்டில் உள்ள மக்களும் முறையான பாதுகாப்புயின்றி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்த
அரசாங்கத்தின் முலமாக சமுர்தி கொடுப்பணவூ பெறுபர்களும் உள்ளார்கள் பெறாதவர்களும் உள்ளார்கள் ஆனால் எமது அரசாங்கத்தில் அனைவருக்கும் சமுர்தி கொடுப்பனவு வழங்குவோம் நாம் இன்று மக்கள் மத்தியில் வழங்கபடுகின்ற வாக்குறுதிகள் அனைத்தும் எதிர் வரும் 16ம் திகதிக்கு பின்னர் நிறைவேற்றபடும் என்றார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!