முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > எமது அரசாங்கத்தில் தான் மலையக மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டது! கொட்டகலையில் மஹிந்த தெரிவிப்பு

எமது அரசாங்கத்தில் தான் மலையக மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டது! கொட்டகலையில் மஹிந்த தெரிவிப்பு

எமது அரசாங்கத்தில் தான் மலைய மக்களுக்கும் மலையக பகுதிக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட்டதாக ஸ்ரீலங்கா பெரமுன கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்தராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

12.11.2019. செவ்வாய்கிழமை கொட்டகலை பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ, மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் ஜந்தாயிரம் ருபா பெற்று தருவதாக கூறியவர்கள் பெற்று கொடுத்தார்கள். இல்லை நாங்கள் ஆட்சியில் இருந்தால் பெற்று கொடுத்திருப்போம். எமது அரசாங்கத்தில் மலையக தோட்டபுறங்களில் வீதிகள் வைத்தியசாலைகள் வைத்தியசாலைக்கு மருந்துகள் போன்ற அபிவிருத்திகளை கொண்டு வந்தோம்.

இன்று வீதிகள் புனரமைக்கபடுவதில்லை வைத்தியசாலைகளில் மருந்துகள் கூட இல்லாத நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது நாங்கள் நாட்டில் உள்ள வைத்தியசாலைகள் மாத்திரமல்ல மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்தோம். விஷேடமாக டிக்கோய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்தோம் நாங்கள் ஆட்சியில் இருந்த போதுதான் மலையகத்தில் இருந்து பல்கலைகழகம் வைத்திய கல்லுரிக்கு 23 பேர் அனுப்பி வைத்ததை நான் இந்த இடத்தில் பெருமையோடு கூறுகிறேன். மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆறுமுகன் தொண்டமான் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தார் மலையகத்தில் மாத்திரம் மஹிந்தோதய தொழில்நுட்பகூடங்கள் நூற்றுக்கு மேல் அமைக்கபட்டு உள்ளது மலையகத்தில் உள்ள பிள்ளைகளுக்கு வேறு மொழிகள் கற்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வீடமைப்பு திட்டத்தை ஆரம்பத்தில் மேற்கொண்டோம் நாம் மக்களுக்கு இன்னும் வீட்டு பிரச்சினைகள் இருக்கிறது. அதனை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவை பெற்று கொடுக்க கோட்டாபய பெற்று தருவதாக உருதி வழிங்கியூள்ளார் நிச்சயமாக அதனை பெற்று கொடுப்பார் என குறிப்பிட்டார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!