முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > கோட்டாபய ழூலமாக மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும்! ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

கோட்டாபய ழூலமாக மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படும்! ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஸ மூலமாக மலையகத்தில் மாற்றம் ஒன்று ஏற்பட்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கபட உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

12.11.2019. செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கா பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் கொட்டகலையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உறையாற்றும் போது ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை வெற்றிபெற செய்ய வேண்டுமானால் நாம் அனைவரும் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக இருந்து எதிர்வரும் 16ம் திகதி வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும். நாட்டில் ஏற்பட உள்ள அரசாங்கத்தின் மூலமாக தகுதி உள்ள அனைவருக்கும் சமுர்தி கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கபட உள்ளது.

மாற்றுகட்சியின் வேட்பாளர் கூறுகிறார் மக்கள் மத்தியில் சென்று தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் அடிப்படை சம்பளம் 1500 ரூபா பெற்று கொடுப்பதாக இது மக்களுக்கு வழங்கும் பொய்யான வாக்குறுதி எமது மக்கள் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை இந்த 1500 ரூபா ஒருபோதும் தொழிலாளர்களுக்கு வழங்கபட மாட்டாது. எமது ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் மஹிந்த ஆகிய இருவரிடமும் ஒரு கோரிக்கை ஒன்றை முன்வைத்தேன் மலையக மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அமைக்கபடும் வீடமைப்பு திட்டத்தில் தகர கூறைகள் வேண்டாம். கொங்ரீட் சிலப் போட நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டுமென கோரியுள்ளேன் அவ்வாறு வீடமைப்பு திட்டத்தினை மேற்கொண்டால் போடப்பட்ட கொங்கிரீட் சிலப்பிற்கு மேல் உங்களுடைய பிள்ளைகளுக்கு மேலும் ஒரு வீடமைப்பினை மேற்கொள்ள முடியும் அதற்கு மாற்றுகட்சியினர் கூறுகிறார்களாம்.

நாங்கள் மாடி வீடு கட்டுவதாகவும் மேல் இருந்து எச்சில் துப்பினால் கீழ் நோக்கி விழுவதாக நான் ஒன்று அவர்களிடம் கேட்கிறேன். மேல் இருந்து எச்சில் துப்பினால் கீழே விழாமல் வேறு எங்கு விழும் மக்கள் மத்தியில் மாற்றம் ஒன்று ஏற்பட போகிறது என்பதை அறிந்து அஞ்சி சம்பந்தம் இல்லாத விடயங்களை பேசி வருகிறார்கள். ஏன் என்றால் மக்கள் அவர்களை புறம் தள்ளி வைத்து விட்டார்கள். கடந்த காலங்களில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியை நாம் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் இம் முறை நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டாபய ராஜபக்ஸ வெற்றிபெருவார் என குறிப்பிட்டார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle