முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > கோட்டா ஜனாதிபதி ஆனால் தொட்டாவுடன் வந்து தோட்டங்களில் புலிகளைச் சுடுவாரா? திலகர் எம்.பி கேள்வி

கோட்டா ஜனாதிபதி ஆனால் தொட்டாவுடன் வந்து தோட்டங்களில் புலிகளைச் சுடுவாரா? திலகர் எம்.பி கேள்வி

கூட்டு ஒப்பந்த முறையின் கீழ் எப்போது தோட்டங்கள் சென்றனவோ அன்றில் இருந்தே தோட்டங்கள் காடாகத் தொடங்கின. அந்த ஒப்பந்தத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கூடிப்பேசி ஒப்பமிடும் போது தோட்டத்துக்கு சிறுத்தை வருவதைப் பற்றி பேசாத தலைவர்கள் இப்போது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அதனைப் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது. கோட்டா ஜனாதிபதி ஆனால் தோட்டாவுடன் வந்து தோட்டங்களில் புலிகளைச் சுடுவாரா? வேண்டுமானால் நமது இளைஞர்களை புலிகளை என கூறி சுடுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.ராமச்சந்திரன் ஏற்பாட்டில் சமர்ஹில் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

இந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களுக்காக 32 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பேரம்பேசியவர்கள் பிரசாரக் கூட்டங்களில் அதனைப் பற்றி ஏதும் விளக்குவதாக தெரியவில்லை. மாறாக ஐம்பது ரூபா, ஆயிரத்து ஐநூறு ரூபா, ஐயாயிரம் ரூபா என ரூபா பற்றியே பேசுகிறார்கள். இந்த தொகைகளை பேசி விடுவதனால் ஆயிரம் ரூபாவை மக்கள் மறந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். கடந்த வருடம் நடந்தவற்றை மக்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட மாட்டார்கள். ஒக்டோபர் மாதம் 24 ம் திகதி 1000/= சம்பள உயர்வு கோரி இளைஞர்கள் காலி முகத்திடலில் போராடினார்கள். 26 ம் திகதி தலைவர் ஒருவர் அறிக்கை விட்டார். அய்யாவின் சிரார்த்த தினம் 30 திகதி ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக் கொடுக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுப்பதாக சொன்னார். 26 ம் திகதி பாராளுமன்றில் உரையாற்றிய நான் அந்த முடிவை வரவேற்றேன். அந்த முடிவு தான் மலையகத்தின் விடிவு என்றேன்.

ஆனால், அன்று மாலை இந்த நாட்டில் நடந்ததோ பெரும் திருட்டு. உலக அரசியல் வரலாற்றிலேயே நடக்காத பெரும் திருட்டு. அன்றைய அரசாங்கத்தையே மகிந்த ராஜபக்ச குழுவினர் திருடிக் கொண்டார்கள். அந்த திருட்டு அரசாங்கத்தில் அய்யாவின் சிரார்த்த தினத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டார்களே தவிர பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவில்லை. அந்த அமைச்சரவையில் ஐந்தாறு அமைச்சரவை கூட்டங்களும் நடந்தன. அப்போது வெட்டைக் குறைத்து டெக்ஸை குறைத்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்காதவர்கள் பெற்றுக் கொடுத்தது வெறும் 20/= என்பதை மக்கள் மறக்கவில்லை. அதுவும் அடிப்படை சம்பளமில்லை.மேலதிகமாக எடுக்கும் கொழுந்து கிலோ ஒன்றின் விலையை 30/= ல் இருந்து 50/= ஆக்கினார்கள் அவ்வளவுதான். இப்போது தேர்தல் காலம் வந்தவுடன் தலைவருக்கு வரியை குறைத்து 1000/= சம்பளத்தை வழங்கும் ஞானம் பிறந்திருக்கிறது. தோட்டங்களுக்கு சிறுத்தை வருவது தெரிகிறது ..இவர்களது பிரசாரத்தை பார்த்தால் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் வருகிறது என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle