கோட்டபாய செய்ய முடிந்த வாக்குறுதிகளை மாத்திரமே சொல்கிறார்! லெஸ்லி தேவேந்திர ஹட்டனில் தெரிவிப்பு

கோட்டபாய செய்ய முடிந்த வாக்குறுதிகளை மாத்திரமே சொல்கிறார்! லெஸ்லி தேவேந்திர ஹட்டனில் தெரிவிப்பு

இந்த அரசாங்கம் செய்ய முடியாத பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது ஆனால் கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் தனக்கு செய்;ய கூடிய விடயங்;களையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள விடயங்களை மாத்திரமே தெரிவித்துவருகிறார்.ஆகவே யார் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கின்றார்களோ? அவர்களை ஆதரிப்பதே சிறந்தது. என ஸ்ரீ லங்கா சுத்ந்திரகட்சியின் தொழிற்சங்க செயலாளர் லெஸ்லி தேவேந்திர ஹட்டன் டிக்கோயா நகரமண்டபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் முக்கியத்துவம் மற்றும் யாருக்கு வாக்களிப்பது தொடர்பாக தோட்டத்தொழிலாளர்களை தெளிவு படுத்தும,; கூட்டம் ஒன்று நுவரெலியா ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களான பெரியசாமி பிரதீபன்,பிரபாகரன் ஏற்பாட்டில் இன்று (12) திகதி டிக்கோயா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று பாரிய அளவில் நடைபெறுகின்ற, கூட்டங்களில் மக்கள் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை. அங்கு கழியாட்டங்களும்,கிளு கிளுப்பூட்ம் பேச்சுக்களும் சேறுப்பூசும் பேச்சுக்களும் மாத்திரம் தான் இடம்பெறுகின்றன.இதனால் இன்றும் மக்கள் சரியான தீர்வ்;pனை எடுக்க முடியாத ஒரு நிலையிலேயே உள்ளனர்.

மக்கள் சரியான தீர்வினை எடுக்க வேண்டிய மிக முக்கிய தேர்தல் இதுவாகும் இதற்கு முன் இலங்கையில் பண்டாரநாக்க தேர்தலில் பின் மக்கள் முடிவு செய்ய வேண்டிய மிக முக்கிய தேர்தல் இதுவாகும்.

காரணம் இன்று நாடு எந்த திசையினை நோக்கி பயணிக்கின்றது. என்ற விடயம் இன்னமும் மக்கள் அறியாது உள்ளனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் எடுத்த மூன்று மாத்திலேயே மத்திய வங்கியின் கொள்ளை இடம்பெற்றது.அதனால் யாருக்கு நட்டம் ஏற்பட்டது. எமது அப்பாவி தோழிலாளர்களுக்கு தான் அவர்கள் சிறுக சிறுக சேற்று வைத்த ஓய்வூதிய பணம் தான் கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையிட்டவர்கள் இன்று நிம்மதியாக சிங்கப்பூரில் உள்ளனர்,அது தொடர்பாக அரசாங்கம் எதுவும் கதைப்பதி;ல்லை.இதன் பாதிப்பு தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறப்போகும் போது தான் தெரியும்.அப்போது அவர்களின் ஓய்வூதிய பணம் குறைக்கப்பட்டிருக்கும்.

அது மட்டுமல்ல தொழிலாளர்களின் உரிமைகளை முடக்குவதற்காக இந்த அரசாங்கம் 52 மசோதாக்களை கொண்டு வந்துள்ளது.அதனை தற்போது செய்தால் தங்களுக்கு வாக்குகள் குறைந்து விடும் என்பதற்காக அதனை ஒத்தி வைத்துள்ளது அவர்கள் வெற்றி பெற்றால் நிச்சயம் அது சட்டமூலமாகும் இதனை தொழிலாளர்கள் அறிய வேண்டும் .

அண்மையில் உங்களுக்கு தெரியும் கைது செய்பவர்களை விடுவிப்பதற்காக இலங்கையில் பயங்கர வாத சட்டத்தினை இலகு படுத்த வேண்டும.; என ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டது ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை பயன்படுத்தி போராட்டம் செய்பவர்களை பயங்கர வாத சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு பல முயற்சிகளை எடுத்தது. உங்களுக்கு தெரியும் கடந்த ஏப்ரேல் குண்டு வெடிப்பின் பின் ரணில் விக்கிரமசிங்க பயங்கரவாத சட்ட சீர்திருத்தத்தினை அவசர மாக கொண்டு வந்தார்.

இந்த சட்டத்தின் மூலம் தமது உரிமைக்காக நாளாந்தம் போராடும் தொழிலாளர்களை கைது செய்து சிறையில் வைக்க, முடிவதுடன் அவர்களின் சொத்துக்களையும் அரச உடமையாக்க முடியும்.வீதியில் செல்லும் போது வீடு ஒன்றுக்கு கல் எறிந்தால் அவரையும் பயங்கரவாதி என்று சித்தரிக்க முடியும். ஆகவே இவற்றை தடுக்க வேண்டும் என்னாறல் எமக்கு வரும் ஆபத்துக்களை நாம் அறிந்திருக்க வேண்டும். அது மாத்திரமன்று தொழிலாளர்கள் தற்போது எட்டு மணித்தியாலங்கள் செய்யும் வேலை 12 மணித்தியாலம் மேலதிக கொடுப்பனவுகள் எமுவுமின்றி அதிகரிக்கவும், தற்போது வழங்கப்படும் வார இறுதி லீவினை ஒரே நாளில் வழங்காது தமது தொழில் வழங்குநர் வாரத்தின் குறிப்பிடுகின்ற நாட்களில் லீவினை பெற்றுக்கொள்ளவும் சட்டங்கள கொண்டுவரப்படவுள்ளன. இவ்வாறு வந்தால் என்ன நடக்கும் குடும்பமும் இல்லாது போகும்.ஏனென்றால் கணவன் வீட்டில் இருக்கும் போது மனைவி வேலைக்கு சென்று விடுவாள்,இவ்வாறு தொழிலாளர்களுக்கு அநீதி இளைக்கும் பல சட்டங்களை தற்போது உள்ள அரசாங்கம் கொண்டுவரவுள்ளது.இதனை தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் எமது பிள்ளைகள் தான் பாதிப்புக்குள்ளாவார்கள்,எனவே தான் இந்த தேர்தல் மிக முக்கியமானது எனவே மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 73 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!