ராஜபக்ச முகாமை முழுமையாக தகர்த்தெறிந்து சஜித்துக்கு வாக்களிப்போம்!  வேலுகுமார் எம்.பி. கோரிக்கை

ராஜபக்ச முகாமை முழுமையாக தகர்த்தெறிந்து சஜித்துக்கு வாக்களிப்போம்! வேலுகுமார் எம்.பி. கோரிக்கை

10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் கைவசமிருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆண்டு, அடிமைகளாக வழிநடத்திய ராஜபக்சக்களும், ‘தொண்டமான் காங்கிரஸ்’ உறுப்பினர்களும், இன்று மலையக தமிழர்களுக்காக குரல் கொடுப்பதானது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதகதைபோல் உள்ளது – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

அதேபோல் இறுதிப்போரின்போது தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது தெற்கில் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மஹிந்த அணி உறுப்பினர்கள், இன்று வடக்குக்கு சென்று அங்குள்ள மக்களை கட்டியணைத்து வாக்கு கேட்கின்றனர்.இவர்களுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி ‘வாக்குரிமை’ என்ற ஜனநாயக ஆயுதத்தின் ஊடாக மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்றும் வேலுகுமார் எம்.பி.குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரசாரக்கூட்டம் இன்று (13.11.2014) கண்டியில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் எம்.பி. மேலும் கூறியதாவது,

“மலையகத் தமிழர்களின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்காது என்பதால், சந்தர்ப்பாத அரசியல் நடத்தும் தொண்டமான் காங்கிரஸ் உட்பட மேலும் சில கட்சிகளை விலைக்குவாங்கி, மலைநாட்டில் காலூன்றுவதற்கு ராஜபக்சக்களும் அவரின் விசுவாசிகளும் முயற்சித்தனர்.ஆனால், சஜித்துக்கே தாங்கள் வாக்களிப்போம் என்பதை மலையக மக்கள் உறுதிபடுத்தியுள்ளதால் கதிகலங்கி நிற்கின்றனர்.

படைபட்டாளத்தோடு பெருந்தோட்டப்பகுதிகளுக்குவந்து தொண்டைக்கிழிய கத்தி,பெருந்தோட்ட மக்களுக்காக பல வாக்குறுதிகளை ராஜபக்சக்கள் வழங்கியுள்ளனர்.10 ஆண்டுகளாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த மஹிந்த ராஜபக்சவுக்கு, பதவியில் இருக்கும்போது பெருந்தோட்ட மக்கள்மீது வராத அக்கறை இன்று திடீரென வந்துள்ளது ஏன்?அரியணையேறுவதற்காக எந்த வேசத்தையும் போடுவதற்கு ராஜபக்ச தயாராகவே இருக்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

மறுபுறத்தில் எதாவது அமைச்சு பதவியும், சலுகைகளும் கிடைத்தால்போதும் என்ற நினைப்பில் அரசியல் நடத்திவரும் ஆறுமுகன் தொண்டமான், தான் அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்ட மக்களின் உரிமைக்காக ஓர் அமைச்சரவைப் பத்திரத்தையாவது சமர்ப்பித்திருப்பாரா? அவ்வாறு சமர்ப்பித்திருந்தாலும் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுத்திருப்பாரா?

அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரு சபைஒத்திவைப்புவேளை பிரேரணையாவது கொண்டுவந்திருப்பார்களா? சட்டமூலங்களை முன்வைத்திருப்பார்களா? அவ்வாறு செய்திருந்தால் அதனை ஆதாரத்துடன் அறிவிக்குமாறு தொண்டமானுக்கும், அவரின் சகாக்களுக்கும் சவால் விடுக்கின்றேன்.

எல்லாம் கைவசம் இருந்தபோது மலையக மக்களுக்காக எதனையும் செய்யதாவர்கள், இன்று அவர்களின் நலன்குறித்து கதைப்பதானது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைபோல்தான் இருக்கின்றது. எனவே, ராஜபக்ச, தொண்டமான் கூட்டணியை கனவில்கூட நம்பகூடாது. அவ்வாறு நம்பினால் நாட்டுக்கும், வீட்டுக்கும், நமக்கும் இனி இருண்ட யுகத்தை நோக்கியே பயணிக்க வேண்டிவரும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியே குறுகிய காலப்பகுதிக்குள் அபிவிருத்திக்கு சமாந்தரமாக உரிமைசார் விடயங்களையும் மக்களுக்காக வென்றெடுத்துள்ளது. இதன்காரணமாகவே முற்போக்கு கூட்டணி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு பேராதரவை வழங்க மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அதேவேளை, போர் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களை அடக்கி ஆள ராஜபக்சக்கள் முயற்சித்தனர். ஆனால், தன்மானத் தமிழர்கள் அடங்க மறுத்தனர். துணிகரமாக அறவழியில் போராடினர். தேர்தல்களிலும் பதிலடி கொடுத்தனர்.

இருந்தும் வெட்கமில்லாமல் மீண்டும் மீண்டும் வடக்குக்கு சென்று கெஞ்சுகின்றனர். இம்முறை நாமல் ராஜபக்ச சென்றுள்ளார். மக்களை கட்டியணைத்து சிறப்பாக நாடகத்தை அரங்கேற்றிவருகிறார். அவருக்கும் அவரின் பங்காளிகளுக்கும் 16 ஆம் தக்க பாடம் புகட்டப்படும்.

மேலும் வாக்குரிமை என்பது எமது பிறப்புரிமையாகும். அந்த ஜனநாயக உரிமையை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். எனவே, 16 ஆம் திகதி மாலைவரை காத்திருக்காமல், நேரங்காலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

 129 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!