முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > ஜனாதிபதி தேர்தல்! நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள்

ஜனாதிபதி தேர்தல்! நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள்

நாட்டில் ஏழாவது ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்காக எட்டுவது ஜனாதிபதி தேர்தல் இன்று (16) திகதி மிக அமைதியாக நடைபெற்றுவருகின்றன..

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா ,ஹங்குரங்கெத்த, கொத்மலை, அம்பகமுவ,வலப்பனை, ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட சுமார் 488 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்புக்கள் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகின.

இம்முளை இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு நுவரெலியா மாட்டத்தில் மாத்திரம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 28 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக 6850 அரச அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காக 3100 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கும் ஏனைய கடமைகளுக்கும் 522 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்தார்.ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் மற்றும் இரானுவ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

வாக்கெடுப்புக்கள் உரிய முறையில் நடைபெறுகின்றனவா? என்பதனை கண்காணிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக இருந்தன.

மலையக வாழுகின்ற தமிழ் மக்கள் மற்றும் சகோதர மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபடுவதனை காணக்கூடியதாக இருந்தன.

ஹட்டன் கே..சுந்தரலிங்கம்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle