முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவு! தெரிவத்தாட்சி அலுவலர் புஸ்பகுமார தெரிவிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவு! தெரிவத்தாட்சி அலுவலர் புஸ்பகுமார தெரிவிப்பு

ஏழாவது ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்காக நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 488 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்புக்கள் இன்று இடம்பெற்றன.

நுவரெலியா மாவட்டத்தில் இன்று (16) திகதி காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணிவர இடம்பெற்றன.இந்த வாக்கெடுப்பில் சுமார் 80 சதவீதமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்தார்.

குறித்த வாக்கெடுப்பின் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் வாக்கெடுப்புக்கள் மிகவும் அமைதியாக முறையில் நடைபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம் முறை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் ஆர்வத்துடனும் அதிகமாகவும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு நுவரெலியா மாட்டத்தில் மாத்திரம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 28 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

தேர்தல் கடமைகளுக்காக 6850 அரச அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காக 3100 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கும் ஏனைய கடமைகளுக்கும் 522 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் இன்று இரவு 8.00 மணியவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக 48 வாக்கெண்ணும் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வாக்கெண்ணும் பணிகளுக்கு 3100 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

Leave a Reply

error: Content is protected !!