முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > செந்தில் தனது கூற்றை வாபஸ் பெற வேண்டும் ; இல்லையேல் ஆர்ப்பாட்டம், அட்டனில் இளைஞர்கள் கொந்தளிப்பு

செந்தில் தனது கூற்றை வாபஸ் பெற வேண்டும் ; இல்லையேல் ஆர்ப்பாட்டம், அட்டனில் இளைஞர்கள் கொந்தளிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றி மலையகத்தில் வாழும மக்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை முன்வைத்தார். அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் இல்லாவிட்டால், நாடெங்கிலும் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க போவதாக மலையக கல்வி கற்ற இளைஞர்கள் சார்பாக என் கிசான்குமார் தெரிவித்தார்.
இன்று (24) ஹட்டனில் இளைஞர்கள் சிலர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் அங்கு தொடர்ந்து கருத்தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்த கருத்து தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தோம.; ஆனால் எமக்கு வழங்கிய அறிவுறுத்தல் காரணமாக இன்று இந்த ஊடாக சந்திப்பினை நடத்தி அதனை அவர் வாபஸ் பெறாத பட்சத்தில் நாங்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
செந்தில் தொண்டமான் அவர்கள் ஊவா மாகாணத்தில் ஒரு பொறுப்ப வாய்ந்த கல்வி அமைச்சராக இருந்தவர்.அவர் கல்வி சேவையாற்ற வேண்டியவர.; அவ்வாறு இருக்கும் கல்வி கற்ற அல்லது கற்றுக்கொண்டிருக்கின்ற ஒட்டுமொத்த சமூகத்தினை இழிவுபடுத்தம் வகையில் அப்பாவிகள்,படிகாதவர்கள்,அதிக பட்சமாக உயர்தரமே கற்றிருக்கிறார்கள்.என்று தெரிவிக்கிறார.; அவர் ஒரு கல்வி அமைச்சர் என்ற வகையில் இவ்வாறான கருத்துக்கள் தெரிவிப்பதற்கு முன் தான் தெரிவிக்கும் கருத்து சரியானதா என்று சரிபார்த்து விட்டு தெரிவிப்பது சிறந்தது.அவர் மட்டுமல்ல யார் கல்வி தொடர்பாக தெரிவித்தாலும் சரியாக தெரிவிக்க வேண்டும்.கருத்து தெரிவிக்கும் போது ஒரு சமூதாயத்தினை இழிவு படுத்தும,; தொனியில் அக்கருத்து அமையக்கூடாது என்பது எமது வேண்டுகோள்.அவருடை கருத்தினை ஒருவர் மறுத்து கூறிய போது ஆம் எனக்கு தெரியாமல் இருந்திருக்கிறது ஒரு லயத்தில் 50 வைத்தியர்கள்,50 பொறியியலாளர்கள் இருக்கிறார்கள.; என்று ஏளானமாக பேசுவது மிகவும் வருந்ததக்கது.அவரை அமைச்சராக மாற்றியவர்கள் மலையக மக்கள் ஆகவே எங்கள் மக்களை அவமானப்படுத்துவது பார்த்து கொண்டு இருக்க முடியாது.அத்தோடு அவர்கள் இனசட் பீபல் என கூறுவதும் அவரை தெரிவு செய்து அனுப்பிய மக்களை அவமானப்படுத்துவதாகவே அமைகின்றன.எனவே அவர்கள் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன் அவர் இதனை ஊடகங்கள் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அதனை மலையகத்தில் வாழும் கற்ற சமூகம் எதிர்பார்திருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஏ.ஆர்.சி ஜோன் கருத்து தெரிவிக்கையில் ..
மலையக சமூகம் என்பது இந்த நாட்டிலே இலவச கல்வி 50 வருட காலம் புறக்கணிக்கப்பட்ட சமூகமாக உள்ளது.இருந்த போதிலும் இந்த நாட்டில் இலவச கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பின் பல்வேறு சமூக பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கல்வியிலே முன்னேறி வருகின்றார்கள். தேசிய மட்டத்தில் ஒப்பிடுகையில் சிறிய பின்னடைவு இருந்தாலும் கூட ஏனைய சமூகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த சமூதாயம் முன்னேறியுள்ளது. என்பது எவராலும் மறுக்க முடியாது.இன்று அரச துறையினராயினும் சரி தானியார் துறையினராயாயினும் சரி பல்வேறு உயர் பதவிகளில் பல்வேறு மட்டங்களை சார்ந்தவர்கள் பணி பரிந்து வருகிறார்கள்.உயர் அதிகாரிகளாக பலர் இருக்கிறார்கள். பல்வேறு பேராசிரியர்கள் உருவாகியிருக்கிறார்கள். பொறியிலாளர்கள்,வைத்தியர்கள் ஆசிரியர்கள் என பலர் உருவாகியிருக்கிறார்கள்.அண்மையில் நடைபெற்ற நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் கூட 12 பேர் ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து தெரிவாகியிருக்கிறார்கள்.இது இந்த நாட்டிக்கு முன் உதாரணமாக கொள்ளலாம். இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் இந்த சமூகத்தினை இழிவாக பார்க்கின்ற தன்மை காணப்படுகின்றது. நிலையில் இந்த சமூகத்;;;தினை நக்கலாகவும் இழிவாகவும் பேசுவது என்பது, இவ்வாறு பேசுபவர்களுக்கு வலு சேர்ப்பதாகவே அமையும் எனவே செந்தில் தொண்டதான் அவர்களின் அரசியல் இருப்பிற்கும் இது பாதமாக அமையும் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து அம்பகமுவ செயலனத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ரஞ்ஜித் கருத்து தெரிவிக்கையில்..
செந்தில் தொண்டமான் அவர்களின் கருத்தை நோக்கும் போது மலையகத்தில் கற்றவர்கள் இல்லை. என்ற தொனியிலயே அவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சராக இருந்த அவர் கல்வி கண்ணை திறக்க வேண்டுமே தவிர அதற்கு மாறாக கருத்துக்களை வெளியிடுவது வன்மையாக கண்டிக்க தக்க ஒன்று.மலையகத்தை பொறுத்த மட்டில் கல்வி மானகள் இல்லை. என்பது அவரது கருத்து ஆனால் அவர் ஒன்றை மறந்து விட்டா.ர் பதுளையில் முதல் இலங்கை போற்றும் அளவுக்கு மூன்று பேராசியர்கள் இருக்கிறார்கள்.அதனையும் அவருக்கு நினைவு படுத்த விரும்புகிறோம்.நிர்வாக சேவையில் போட்டியிடும் போது அனைவரும் சித்திபெறா முடியாது அதற்காக அவர்கள் கற்றவர்கள் அல்ல என முடிவு செய்வதும் பிழையானது மாறாக கல்வி அமைச்சின் ஊடாக நிர்வாக சேவைக்கு ஆட்சேர்க்கும் போது அவர்களுக்கு முக்கியத்துவமளித்து செயப்பட வேண்டியது ஆட்சியாளர்களின் கடப்பாடாகும.; அதனை விடுத்து முட்டாள் தனமான கருத்துகளை வெளியிடுவததில் அனைவரும் தவிர்த்து கொள்ள வேண்டும். ஆகவே அவர் கூறிய கருத்துக்களுக்காக அவர் ஊடகத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே..சுந்தரலிங்கம்

Leave a Reply

error: Content is protected !!