முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி! சீ.பி.ரத்நாயக்க எம்.பி தெரிவிப்பு

சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி! சீ.பி.ரத்நாயக்க எம்.பி தெரிவிப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சின்பான்மை மக்களுடைய வாக்குகள்யின்றி எம்மால் வெற்றிபெற முடியாது என கூறியவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் அமோக வெற்றி பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

24.11.2019.ஞாயிற்றுகிழமை சிறீலங்கா பெரமுன ஆதரவாளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வு ஒன்று அங்குராங்கெத்த பகுதியில் ஏற்பாடு செய்யபட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் மஹிந்த ராஜபக்ஸ என்ற ரீதியில் இந்த நாட்டு மக்கள் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு வாக்களித்துள்ளார்கள். ஆகையால் நிம்மதியாக வாழ்வதற்கு நமது நாடு உள்ளது என நாம் என்ன முடியும்.

யாருக்கும் முடிவிற்கு கொண்டுவர முடியாத யுத்தத்தை எமது தலைவர் இரண்டரை வருட காலபகுதியில் நிறைவுக்கு கொண்டுவந்தார் இந்த நாடு முலுதிலும் உள்ள வீதிகளை புனர்நிர்மானம் செய்தார். தோட்டபுறங்களுக்கு கொங்ரீட் வீதி
கொண்டு வரபட்டது. மஹிந்தராஜபக்ஸவினால் அதே போல் பாடசாலை சுகாதார வசதி போன்ற அபிவிருத்திகளையும் முன்னெடுத்தார்.

இன்று மக்களுக்கு மீண்டும் ஒரு தலைவர் கிடைத்துள்ளார் நான் கொள்ளையிடுவதற்கோ மக்களை ஏமாற்றுவதற்கோ அரசியலுக்கு வரவில்லை. எமது மக்களுக்கு சேவை செய்யவே நான் வந்துள்ளேன் ஜனாதிபதி ஒருவருக்கு
2500 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கானப்பட்டார்கள். ஆனால் எமது ஜனாதிபதி அதனை குறைத்து 250ஆக மாற்றியுள்ளார். இது போன்ற விடயங்களை தான் நாம் பேசவேண்டும் என்றார்.

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!