நோர்வூட் நகரில் கடைகள் தீ பிடித்து எரிந்தமைக்கான காரணம் என்ன? பொலிஸார் வெளியிட்ட தகவல்

நோர்வூட் நகரில் கடைகள் தீ பிடித்து எரிந்தமைக்கான காரணம் என்ன? பொலிஸார் வெளியிட்ட தகவல்

நோர்வூட் நகரில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின் ஒழுக்கே காரணமாக இருக்கலாம் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரில் நேற்று (25) காலை 6.45 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் மூன்று கடைகள் ஒரு வீடு முற்றாக எரிந்து நாசமடைந்தன.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில் இந்த தீ விபத்து முதலில் எரிந்த கடைகளில் சில்லறை கடையிலேயே ஏற்பட்டுள்ளன.அக்கடையில் இரண்டு முடிந்த கேஸ் சிலிண்டர்கள் தான் இருந்துள்ளன. அதனால் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவாக காணப்படுகின்றன.

அதோடு தீ விபத்து ஏற்படும் போது குறித்த கடை உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர். வீட்டில் நித்திரையிலேயே இருந்துள்ளனர்.அயலில் இருந்த கடைகாரர்களே கதவை உடைத்து அவர்களை காப்பாற்றியுள்ளனர் ஆகவே அதிகாலை விளக்கு வைப்பதற்கான சந்தர்ப்பமும் இல்லை.

ஆகவே பெரும் பாலும் மின் ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மின்சார சபை பொறியியலாளர் கருத்து தெரிவிக்கையில் குறித்த கடைகளில் மின்சார கோளாரினால் தீ ஏற்பட்டதற்கான எவ்விதமான தடயங்களும் இல்லை.கடைகளில் மின் வயர்களில் தேவைக்கேற்ப செய்கின்ற மாற்றங்கள் காரணமாக சில நேரங்களில் வயர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தீ பிடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் சகல வயர்கள் மற்றும் ஆளிகள் எரிந்துள்ளதனால் அதனை உறுதியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாத போதிலும் கடைகளில் மற்றும் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன.

இது குறித்து மேலதிக விசாரணைக்காக இராசயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகளை மேலும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 220 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!