25 சதவீத சம்பன அதிகரிப்பை அடிப்படை சம்பளத்தில் இணைக்க கோரி கோரி தோட்ட சேவையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

25 சதவீத சம்பன அதிகரிப்பை அடிப்படை சம்பளத்தில் இணைக்க கோரி கோரி தோட்ட சேவையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரி;க்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர்கள் சங்கம் மஸ்கெலியா மவுசாகலை சந்தியில் இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டகாரர்கள் ‘கூட்டு ஒப்பந்தத்தினை உடைக்காதே’ ‘சேம லாப நிதியம்,சேமலாப சேவை நிதியம் ஆகியவற்றின் 25 சதவீதத்தினை உடனே வழங்கு’ ‘உடன் படிக்கைகளை மீறாதே’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சிபடுத்திய வண்ணம் கோசமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரவுன்சிக் மஸ்கெலியா, மொக்கா, டிசைட், ஹப்புகஸ்தென்ன, பிரவுன்லோ, மரே, லக்ஷபான, கிலேனேரி,உள்ளிட்ட 10 தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 இற்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஹட்டன பிரதேச உப தலைவர் செல்லையா மனோகரன் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி உள்ளிட்ட 18 பெருந்தோட்ட கம்பனிகள் இணைந்து இம் மாதம் 06 ம் திகதி தோட்ட சேவையாளர் சங்கத்துடன் உடன் படிக்கை ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டது அதில் 25 சதவீத சம்பள அதிகரிப்பினை வழங்க இணைக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளன.ஆனால் ரிச்சட் பீரிஸ் கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா நமுனுகுல,கோலை உள்ளிட்ட பெருந்தோட்ட கம்பனிகள் இதனை கொடுப்பனவாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தன.இதனை அடிப்படை சம்பளத்தில் சேர்க்காது சேம லாப நிதியத்துடன் வழங்கப்படும் ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த அநீதி காரணமாக மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள 10 தோட்டங்களை சேர்ந்த உத்தியோகஸ்த்தர்கள் சம்பளத்தி;னை பெறாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை கொடுபப்னவாக அல்லாது அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்த மாதம் 05 ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்பபோராட்டத்த்pனை முன்னெடுக்க போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 44 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!