
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணி புரியும் உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
மஸ்கெலியா பெருந்தோட்ட நிருவனத்தின் கிழ் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் மாதாந்த கொடுப்பணவு உள்ளிட்ட சேமலாப நிதியம் சேமலாப சேவை நிதியம் நூற்றுக்கு 25 சதவீதத்தம் உடன்படிக்கை போன்ற பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகளோடு கலந்துறையாடி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்கபடுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நேற்று குறித்த நிருவனத்தின் உத்தியோகத்தர்கள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார் .
இதன்போது கடந்த நான்கு தினங்களாக மாதாந்த கொடுப்பனவு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தோட்ட சேவையாளர் சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்
161 total views, 2 views today