முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் முன்னெடுக்கபட்டு இடைநிறுத்தபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் எமது அரசாங்கத்தின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் புதிய பிரதமர் மஹிந்தராஜபக்ஸ ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டில் முன்னடுக்கபட உள்ளதாக மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
30.11.2019.சனிகிழமை நாவபிட்டி நகரில் தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று இந்த மக்களுக்கு தெரியும் எமது ஜனாதிபதி பதவியினை பொருப்பேற்று பத்து நாட்கள் கூட செல்லவில்லை. வரலாற்றில் அரசாங்க ஒன்றை அமைத்ததை நான் கண்டிருக்கின்றோம். அரச தலைவர் சேவை செய்வதனை நாம் பார்த்திருகின்றோம் அரச தலைவர் வாக்குருதியினை வழங்குவதை பார்த்திருக்கின்றோம் .
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு அதிகரிக்கபட்டிருந்த பொருட்களுக்கு தற்பொழுது விலை குறைக்கபட்டுள்ளது தாங்கள் அனைவரும் பார்த்திருக்க கூடும் எமது ஜனாதிபதி எவ்வாறு இந்தியாவிற்கு சென்றார் என்று சதாரனமான ஒரு மனிதரை போல் சென்றார். இந்த நாட்டு மக்கள் இது போன்ற ஒரு மாற்றத்தினை தான் எதிர்பார்த்தார்கள் மாற்று காட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாச வெற்றி பெற்றிருந்தால் என்னால் நடந்திருக்கும் அவர் தேர்தலில்
தோல்வியடைந்த பிறகு ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள். சஜித் பிரேமேதாசவை கானவில்லை அவர் கதவை முடிகொண்டு நித்திரையில் இருக்கிறார். அவருடைய கையடக்க தொலைபேசி கூட நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
கேட்டால் கூறுகிறார்கள் சஜித்பிரேமேதாசவிற்கு சுகமில்லை என்கிறார்கள் சஜித் பிரேமேதாச நித்திரையில் இருக்கிறார் அவர் ஜனாதிபதியாகியிருந்தால் இந்த நாடு எவ்வாறு இருக்கும் ஆகையால் தான் நாங்கள் கோறினோம். இந்த நாட்டிற்கு முறையான தலைவர் ஒருவரை தெரிவு செய்யுமாறு கோரியிருந்தோம். இன்று சிறி கொத்தவில் ஜக்கிய தேசிய கட்சியின் கூட்டங்கள் இடம்பெரும் போது அந்த கூட்டங்களுக்கு சஜித் சமுகமளிப்பதில்லை வாக்களித்த மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சஜித் இல்லை .
ஆகையால் தான் இந்த நாட்டு மக்கள் 14இலட்ச்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த நாட்டுக்கு ஒரு சிறந்த தலைவர் என்ற அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ஸவை தெரிவு செய்தார்கள் என்றார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்