முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மலையகத்தில் கடும் மழை ஒருவர் பலி மூவர் மாயம்; பல இடங்களில் மண்சரிவு அபாயம்.நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

மலையகத்தில் கடும் மழை ஒருவர் பலி மூவர் மாயம்; பல இடங்களில் மண்சரிவு அபாயம்.நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (30) திகதி முதல் பல பகுதிகளில் கணத்த மழை பெய்து வருகிறது இந்த கணத்த மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் ஒரு பலியாகி மேலும் மூவர் மாயமாகியுள்ளனர்.
நுவரெலியா, மலபத்தவ பகுதியில் நேற்று (30) இரவு இடம்பெற்ற மண்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 3 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பதியபெலெல்ல, மலபத்தவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (30) இரவு 7.30 மணியளவில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் குறித்த வீடு முழுவதுமாக மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டினுள் நான்கு பேர் இருந்துள்ள நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவர்களை மீட்கும் பணி தாமதமாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வலப்பனை பொலிஸார், நுவரெலியா இராணுவ முகாமின் இரானுவ வீர்ர்;கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து இன்று (01) காலை 06 மணியளவில் மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.
இதன்போது 18 வயதுடைய யுவதியொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போயுள்ள ஏனைய மூன்று பேரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேலை நேற்று பெய்து கடும் மழை காரணமாக நேற்று பதுளை பஸ்ஸர வீதியில் ஏழாம் கட்டைக்கு அருகாமையில் மண் திட்டு சரிந்து வீழ்ந்ததனால் அவ்வீதியூடான போக்கு வரத்து நேற்று ஆறு மணி முதல் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன.
தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.
இதனால் நுவரெலியா ஹட்டன் மற்றும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலையகத்தின் நீர்த்தேக்த்திற்கு நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருவதனால் காசல்ரி,மவுசாகலை,கெனியோன்,லக்ஷபான,நவலஷபான,விமல சுரேந்திர மேல் கொத்மலை,உள்ளிட்ட நீர் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மலையகத்தில் மழை பெய்து வருவதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்களும் மண் திட்டுக்களுக்கும் மலைகளுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல மரக்கறி தோட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியள்ளன.இதனால் எதிர்காலத்தில் மரக்கறி விலைகளில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

Leave a Reply

error: Content is protected !!