முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு கட்சிபேதமின்றி வீடுகள் வழங்கபடும்! அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

தீ விபத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு கட்சிபேதமின்றி வீடுகள் வழங்கபடும்! அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கபட்டு ஒரு வருடகாலமாக தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வரும் அனைத்து மக்களுக்கும் எவ்வித கட்சி பேதங்கள்யின்றி வீடைப்பு திட்டம் மேற்கொள்ளபட்டு அவர்களுக்கு வெகுவிரைவில் கையளிக்கபடுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

02.12.2019 திங்கள் கிழமை டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்டபகுதிக்கு சென்ற அமைச்சர் அந்த மக்களோடு கலந்துரையாடியே போதே அவர் இதனை தெரிவித்தார் இதன்போது அமைச்சர் உட்பட ஊவா மாகாண முன்னால் அமைச்சர் செந்தில் தொண்டமான் . இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் . நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர்களும் குறித்த தோட்டபகுதிக்கு சமுகமளித்திருந்தனர்.

தாம் பொருப்பேற்றுள்ள அமைச்சின் ஊடாக மேற்கொள்ளபடவிருக்கின்ற வீடமைப்பு திட்டம் தொடர்பிலும் மக்களுக்கு அமைச்சர் தெழிவு படுத்தியதோடு போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் தொழிலாளர்களின் வீடமைப்பு திட்டத்தினை மேற்கொள்ள முதற்பணி ஆரம்பிக்கபட்டுள்ளது இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய கட்டிட ஆய்வாளர்களின் அறிக்கை தமக்கு கிடைக்கபெற்ற ஊடன் வீடமைப்பு திட்டத்திற்கான அடிகல் நாட்டப்படும் தீவிபத்தில் பாதிக்கபட்ட
அனைவருக்கும் வீடுகள் உள்ளது ஆகவே எவரும் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த தோட்டத்தில் உள்ள தொழிலாளர் கடன் பெற்றுள்ளதாக கூறி அவர்களுடை சம்பளத்தில் ஒரு தொகையினை தோட்டநிர்வாகம் அறவிட்டு வருகின்றமை தொடர்பில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தொழிலாளர்களால் முறைபாடு செய்யப்பட்டது. அதற்கு அமைய குறித்த நிர்வாகத்தின் கிழ் பணிபுரியும் சமுகநல உத்தியோகத்தருக்கு எதிராக விசாரனைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மனிதவள பெருந்தோட்ட நிருவனத்திற்கு பணிப்புரை வழங்கபட்டமையும் குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!