முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

பாதிப்பேற்பட்டுள்ள ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

மண்சரிவு காரணமாக மலையக புகையிரத பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் சேவைகள் அப்புத்தளை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து ரயில் சேவையும் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு பண்டாரவளைக்கும், அப்புத்தளைக்கும் இடையில் பயணிகள் பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாரிய மண்சரிவு என்பதன் காரணமாக சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!