முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > புதிய குழு நியமிக்க தீர்மானம்- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

புதிய குழு நியமிக்க தீர்மானம்- ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு!!

கடந்த அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிருவனத்தின் ஊடாக முன்னெடுக்கபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சின் ஊடாக குழு ஒன்று நியமிக்கபட உள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார் 05.12.2019.வியாழகிழமை சமுக வலுவூட்டல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் மனிதவள பெருந்தோட்ட நிருவனத்தின் அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதன் தெரிவித்தார்
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கடந்த அரசாங்கத்தின்  நிதி ஒதுக்கிட்டின் போது மலையகத்தில் வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்திகள் என்பன இடம்பெற்றது இதில் அதிகமான வீடமைப்பு திட்டங்கள் மனிதவள பெருந்தோட்ட அபிவிருத்தி நிருவனத்தின் ஊடாகவே முன்னெடுக்கபட்டது இது தொடர்பில் ஆராய்வதற்காகவே அமைச்சின் ஊடாக இந்த குழு நியமிக்கபட்டதாக அவர் குறிப்பிட்டார் இதன் போது அமைச்சர் உட்பட பெருந்தோட்ட நிருவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!