முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது!!

கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 06 பேர் கைது!!

காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா
கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறுபேர்
பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர் இந்த கைது
05.12.2019.வியாழகிழமை மாலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும்
தெரிவித்தனர்

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட
சுற்றிவலைப்பின் போதே இந்த ஆறு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு
இவ்வாறு கைது செய்யபட்டவர்கள் பலாங்கொடை பகுதியை சேர்ந்த மூன்றுபேரும்
பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியை சேர்ந்த மூன்று பேர் எனவும் சட்டவிரோத
மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட சில உபகரனங்களையும்
கைப்பற்றியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது .

பொகவந்தலாவ கெசல்கமுவ ஒயாவில் பாரிய மாணிக்ககல் சுரங்க குழிகள்
கானப்படுவதோடு இது போன்ற சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு
மேற்கொள்படுகின்றமையால் மண் காசல்ரீ நீர் தேக்கத்தில் நிரம்புவதாகவும்
தெரிவிக்கபடுகிறது .

எனவே கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களுக்கும் பொகவந்தலாவ பொலிஸாரினால்
பினை வழங்கபட்டுள்ளதோடு குறித்த ஆறுசந்தேக நபர்களையும் எதிர்வரும் 10ம்
திகதி செவ்வாய்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு
பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக
விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

 

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!