முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நானூயா,சாமிமலை பகுதிகளுக்கு புதிய மகளீர் பிரதிநிதிகள் நியமிப்பு!!

நானூயா,சாமிமலை பகுதிகளுக்கு புதிய மகளீர் பிரதிநிதிகள் நியமிப்பு!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையில் பொகவந்தலாவ, நானுஓயா, சாமிமலை ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் காரியாலயங்களுக்கு புதிய மகளிர் பிரதிநிதிகளை நியமிக்கும் வைபவம் நடைபெற்றது, இவ்வைபவத்திற்கு இ.தொ.கா இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ், நோர்வுட் பிரதேசசபை தலைவர் ரவிகுழந்தைவேல் மற்றும் நோர்வுட் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மலையகத்தில் உள்ள பெண்களுக்கு வரலாற்று ரீதியில் முன்னுரிமை வழங்குவதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் முன்னுதாரணமாக திகழ்வதாகவும் நாட்டை நிர்வகிக்க பெண்னால் முடியுமாயின் ஏன் இப்பிரதேசங்களில் உள்ள காரியாலயங்களை பெண்களால் நிர்வகிக்க முடியாது என்று கூறினார். இந் நிகழ்வில் காரியாலய பெண் பிரதினிதிகளாக பொகவந்தலாவைக்கு பால்ராஜ் பார்கவி, நானு ஓயாவிற்கு ஜெனிபர் மற்றும் சாமிமலைக்கு உமாவையும் நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!