முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் பகுதியில் சித்திரம்வரையும் வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்!!

அட்டன் பகுதியில் சித்திரம்வரையும் வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்!!

புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் பணிப்புரைக்கு அமைய நாடெங்கிலும் காட்சிபடுத்தபட்ட பெயர்பலகை சுவரொட்டிகளை அகற்றி சித்திரம்வரையும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறு விடுக்கபட்ட பணிப்புறைக்கு அமைய அட்டன் பகுதியில் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளால் மேற்கொள்படும் சித்தரம்வரைதல் வேதலைத்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது .

அந்தவகையில் 07.12.2019.சனிகிழமை அட்டன் மல்லியப்பு பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அட்டன் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளால் முன்னெடுக்கபட்டு வரும் சித்திரம் வரைதல் வேலைத்திட்டத்தினை பார்வையிட்டு அட்டன் பகுதி இளைஞர்யுவதிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்

இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட முன்னால் பாராளமன்ற உறுப்பினர் பி.ராஜதுறை . முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன்.அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலச்சந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!