முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம். பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் தெரிவிப்பு!!

சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம். பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் தெரிவிப்பு!!

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் பல விதிமுறைளை விதித்துள்ளது.அதாவது யாத்திரை வருவோருக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடைச்செய்யப்பட்டுள்ளது.யாத்திரிகர்களுக்கென இலவசமாக பயணப்பையை வழங்குவதுடன், பயண முடிவில் அந்தப் பையை திருப்பி கொடுத்து செல்லவும் இச்சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு நேரங்களில் யாத்திரிகர்கள் செல்லும் வழியில் மின்சார வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 9ஆம் திகதி பெல்மதுளை கல்பொத்தாவெல ரஜமகா விகாரையில் வழிபாடுகள் நடைபெற்று, 11ஆம் திகதி சமன் பூஜை வழிபாட்டு பொருட்களும், பெல்மதுளை ரஜமகா விகாரையிலிருந்து விக்கிரகங்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படவுள்ளது.

சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனைக்கு உட்டுத்தப்படும் மேலும் புகையிரத மார்க்கமாக வருகை தரும் யாத்திரிகர்களின் நலன்கருதி ஹற்றன் புகையிரத நிலைத்திலிருந்து நல்லதண்ணீர் நகரம் வரை விசேட பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லதண்ணீர் மலையடிவாரத்தில் அமைக்கப்படவுள்ள பொலிஸ் நிலையத்திற்கு மேலதிகமாக சீத்தக்குவ, ஊசிமல மலையுச்சி முதலிய இடங்களிலும் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

2020 மே மாதம் வெசாக் போயாதினத்துடன் சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் நிறைவுபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!