முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது – அட்டனில் சம்பவம்!!

19 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது – அட்டனில் சம்பவம்!!

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் என்பில்ட் தோட்ட லயன் குடியிருப்பு ஒன்றில் தோட்ட தொழிலாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யபட வைத்திருந்த 19மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸ்நிலைய குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர் இந்த கைது சம்பவம் 07.12.2019.சனிகிழமை பிற்பகல் வேலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

அட்டன் பொலிநிலைய குற்றதடுப்பு பிரிவினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய
தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது
செய்யபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து
தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட சந்தேக நபரை அட்டன் நீதவான் முன்னிலையில்
முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸ்நிலைய குற்றதடுப்பு
பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!