முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தோட்டதொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெற்றுதர வேண்டும்!!

தோட்டதொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் பெற்றுதர வேண்டும்!!

 

புதிய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைச்சர்கள் வாக்குருதி வழங்கியவாறு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா சம்பளத்தினை பெற்று கொடுப்பதில் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் முன்னால் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் 08.12.2019.ஞாயிற்றுகிழமை தோட்டதலைவர்மார்களுக்கான எதிர்கால அரசியல் நடவடிக்கை அட்டன் இந்ரா விருந்தகத்தில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்றின் போது அவர் தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது முன்னால் அமைச்சர் பழனிதிகாம்பரம் உட்பட முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.சிறீதரன்.பிரதேசசபை மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர்
பழனிதிகாம்பரம்.மலையகத்தில் தற்பொழுது உள்ள அமைச்சர்கள் மக்களுக்கு
வீடமைப்பு திட்டத்தினை பெற்றுதருவதாக பொய்யான வாக்குருதிகளை வழங்கி
வருகிறார்கள் ஆனால் கடந்த அரசாங்கத்தின் போது இந்திய அரசாங்கத்தினால்
வழங்கபட்ட பத்தாயிரம் வீடுகள் மாத்திரமே உள்ளது எனவே அந்த பத்தாயிரம்
வீடுகளையும் முலு மலையகத்திற்கும் வழங்க முடியாது இந்தமாதம் அங்கதவர்களை
அதிகரித்து கொள்வதற்காகவே இது போன்ற பொய்யான வாக்குருதிகளை
கூறிவருகிறார்கள்.

நாங்கள் எந்நேரமும் மக்களோடு இருப்பவர்கள் மக்களை தினமும்
சந்திக்கின்றோம் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு நாம் தயார் நிலையில்
இருக்கின்றோம் எனவே இடம்பெறவிருக்கின்ற பொது தேர்தலில் நுவரெலியா
மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சி அமோக வெற்றிபெரும் அதிகமான வாக்குகளில்
வெற்றிபெற்றுநாங்கள் அமைக்க இருக்கின்ற அரசாங்கத்தோடு இனைந்து மக்களுக்கு
பாரிய சேவையினை முன்னெடுக்க உள்ளோம் .

மக்களுக்கு வாக்குருதி வழங்குவது போல் மக்கள் எதிர்பார்க்கின்ற
வேலைத்திட்டங்களை மக்களுக்கு வழங்கவேண்டும் கடந்த மாதம் 16ம் திகதி
ஜனாதிபதி தேர்தல் 18ம் திகதி தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா
சம்பத்தை பெற்றுதருவதாக கூறினார்கள் ஆனால் தேர்தல் நிறைவடைந்து ஒரு
மாதகாலம் கடந்தும் அவர்களுக்கான சம்பளம் வழங்கபடவில்லை இந்த புதிய
அரசாங்கத்திற்கு ஒரு பொருப்பு இருக்கிறது மக்களுக்கு வழங்கிய
வாக்குருதியினை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டார்

 

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!