முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மஸ்கெலியா விளையாட்டு மைதானத்திற்கு மஸ்கெலியா பிரதேசசபையினால் பூட்டு!!

மஸ்கெலியா விளையாட்டு மைதானத்திற்கு மஸ்கெலியா பிரதேசசபையினால் பூட்டு!!

மஸ்கெலியா நகரப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்த உதைப்பந்தாட்ட சுற்று போற்று ஒன்றுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னால் அமைச்சருமான பழனிதிகாம்பரம் 08.12.2019.ஞாயிற்றுகிழமை வருகை தரவிருந்த வேலை மஸ்கெலியா நகரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு மஸ்கெலியா பிரதேசசபையினால் இன்றைய தினம் மைதானத்தின் பிரதான நுளைவாய் பூட்டபட்டுள்ளதாக விளையாட்டு வீரர்களும் பிரதேசமக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் போது மைதானத்தின் புனரமைப்பு பணிக்காக முன்னால்
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஊடாக 50இலட்ச்சம் ருபா நிதி ஒதுக்கப்பட்டு
புனரமைப்பு பணிகள் முன்னெடுத்திருந்த வேலை இன்றய தினம் உதைப்பந்தாட்ட
போட்டி ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்ததாகவும் அந்த போட்டியின் ஆரம்ப
நிகழ்விற்கு முன்னால் அமைச்சர் பழனிதிகாம்பரம் அழைக்கபட்டிருந்தை அறிந்து
கொண்ட மஸ்கெலியா பிரதேசசபை மைதானத்தின் நுளைவாயினை பூட்டியுள்ளதாக
குற்றம் சுமத்தபட்டுள்ளது.

பிரதேசமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குற்றச்சாற்று குறித்து
மஸ்கெலியா பிரதேசசபையின் தலைவர் ஜீ.சென்பகவல்லியிடம் தொடர்பு கொண்டு
வினவியபோது குறித்த விளையாட்டு மைதானம்பெருந்தோட்ட மனிதவள நிருவனத்தின்
ஊடாகவே புனரைப்பு பணிகள் முன்னெடுக்கபட்டு வந்தன இதுவரையிலும்
பெருந்தோட்ட மனிதவள நிருவனத்தின் ஊடாக குறித்த மைதானம் என்னிடம்
ஒப்படைக்கபடவில்லை இருந்தாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம்
காரனமாக பெருந்தோட்ட மனிதவள நிதியம் வேறு ஒரு அமைச்சின்கிழ்
கொண்டுவரப்பட்டுள்ளது ஆகையால் குறித்த மைதானத்தை வேறு ஒரு நபர் திறந்து
வைப்பதை எம்மாள் அனுமதிக்கமுடியாது எனவே குறித்த பகுதியில்
உள்ளமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டி ஒன்று நடத்தபட வேண்டுமாக இருந்தால்
மஸ்கெலியா பிரதேசசபையிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் இது போன்ற
சட்டதிட்டங்களை கடைபிடிக்காமல் என்மீது குற்றம் சுமத்த முடியாது ஆகவே
தான்மைதானத்தின் நுளைவாயினை தாம் பூட்டியதாக குறிப்பிட்டார்

 

எஸ் சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!