முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > லிந்துலை நோனாதோட்டத்தில் 05மாதத்திற்கு முன்பு புதைக்கபட்டசடலம் மீட்பு!!

லிந்துலை நோனாதோட்டத்தில் 05மாதத்திற்கு முன்பு புதைக்கபட்டசடலம் மீட்பு!!

லிந்துலபொலிஸபிரிவிகற்குட்பட்ட லிந்துளை நோனாதோட்டத்தில் கடந்த ஜந்து
மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்
09.12.2019.திங்கள்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் புபுதுஜயசேகர
தலைமையில் தோன்றி எடுக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

24.07.2019 அன்று குறித்த நபர் சுகயினம் காரனமாக இறந்துள்ளதாக தெரிவித்து
குறித்த தோட்டபகுதியில் உள்ள மையானத்தில் புதைக்கபட்டிருந்து
புதைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு பின்னர் குறித்த மரணத்தில் சந்தேகம்
ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 08ம் மாதம் 08ம் திகதி மரணித்தவரின் மருமகன்
நடராஜ்ரமேஸ் என்வரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய எவ்வித
நடவடிக்கையும் எடுக்கபடாமை தொடர்பில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில்
22.08.2019 முறைபாடு பதிவு செய்யபட்டதன் காரனமாக முறைபாடு செய்யபட்ட
மருமகன் மற்றும் மரணித்தவரின் குடும்பஸ்த்தினர் அனைவரையும் நுவரெலியா
பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு வரவழைக்கபட்டு விசாரனைகள்
மேற்கொள்ளபட்டது இதற்கமைய நுவரெலியா நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கு அமைய
இன்றய தினம் குறித்த சடலம் மீட்கப்பட்டது

குறித்த நபர் மரணிப்பதற்கு முன்பு தான் கைபட எழுதி கடிதம் ஒன்றையும்
மீட்டுள்ளனர் குறித்த கடிதத்தில் தான் மரணித்ததற்கு காரணம் தனது
மனைவி என எழுதபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்


எனவே சம்பவ இடத்திற்கு நுவரெலியா தடைவியல் பொலிஸார் மற்றும் சிரேஸ்ட்ட
வைத்திய நிபுனர்கே.ஜி.சி.எஸ்.சந்ரதாச ஆகியோர் தலைமையில் மரண விசாரனைகள்
இடம்பெற்று சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நுவரெலியா
மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்பட்டது

சடலமாக மீட்கட்ட நபர் 63வயதுடைய பிச்சை ஜெகநாதன் என்பவரே தோன்றி எடுக்கபட்டார் சம்பவம் தொடர்பில் லிந்துளை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!