முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிவனொளிபாத மலை பருவகாலம் நாளை ஆரம்பம் மலையக நகரங்கள் விழா கோலம்!!

சிவனொளிபாத மலை பருவகாலம் நாளை ஆரம்பம் மலையக நகரங்கள் விழா கோலம்!!

2019 2020 ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பருவகாலம் ஆரம்பிப்பதனை முன்னிட்டு மலையக உள்ள நகரங்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் கண்டுவருகின்றன.
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆம்பிப்பதற்காக இன்று காலை பெல்மதுளை கல்பொத்த வல விகாரையிலிருந்து திருவுருவச்சிலை மற்றும் தேவ ஆபரணங்கள் எடுத்துவரப்பட்டு நாளை தினம் மலரவுள்ள பௌர்;ணமி தினத்துடன் ஆரப்பிக்கப்படவுள்ளன.

இந்த திருவுருவச்சிலை தேவ ஆபணங்கள் தாங்கி வாகன ஊர்வலங்;கள் இன்று இரத்தினபுரி,அவிசாலை ஊடாகவும், இரத்தினபுரி பலாபத்தள ஊடாகவும் பலங்கொடை பொகவந்தலா ஊமாகவும் கொண்டுவரப்படவுள்ளன.

இதனை முன்னிட்டு வீதியின் இரு மருங்கிலும் தேவ உருவச்சிலைக்கும் ஆபரணங்களுக்கும் வணக்கம் செலுத்துவதற்காக பல இடங்களில் மலர்சாலைகள்,அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்குவதற்காக தானசாலைகள் குளிபான தானசாலைகள் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பருவக்காலத்தில் நல்லத்தண்ணீர் புனித பிரதேசத்தில் பொலித்தீன் பாவணையினை தடை செய்வதற்காக விசேட வேளைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்.
பக்தர்களின் வசதிகருதி பஸ்கள் மற்றும் விசேட புகையிரத சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 

ஹட்டன் கே.சுந்தரலி;ங்கம்

Leave a Reply

error: Content is protected !!