முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை என்பது வெறும் பெயர் பலகை மட்டத்திலேயே இருக்கிறது!!

பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை என்பது வெறும் பெயர் பலகை மட்டத்திலேயே இருக்கிறது!!

கடந்த அரசாங்க காலத்தில் சட்டம்மாகாகப்பட்ட பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை இதுவரையில் பெயர் பலகை மட்டத்திலேயே இருந்து வருகிறது. என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கரை வருடங்களில் இந்த அதிகார சபையை உருவாக்கியதை மிகப்பெரும்
சாதனையாக விளம்பரம் செய்பவர்கள் அந்த சபையை உருவாக்கி அதன்மூலம் மலையகப்
பிரதேசங்களில் எவ்வாறான அபிவிருத்திகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்பதை
தெளிவுபடுத்த வேண்டும். மலையக பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள்
அபிவிருத்தி அதிகார சபை மலையகத்தை மாற்றியமைக்கக்கூடிய வானளாவிய அதிகாரம்
கொண்ட அமைப்பைப் போல் மிகப்பெரும் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

.ஆனால் அந்த சபைக்கு உள்ள அதிகாரத்தை விட ஏற்கனவே
உருவாக்கப்பட்டிருக்கின்றன தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்துக்கு அதிகளவு
அதிகாரம் இருக்கின்றது என்பதை சட்டமூலத்தை சரியாக தெரிந்து
கொண்டவர்களுக்கு நன்றாக புரியும். இந்தப் பெயர்ப் பலகை அதிகார சபையை
முழுமையாக்கப்பட வேண்டிய பொறுப்பு தற்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்
அவர்களிடமே சுமத்தப்பட்டிருக்கிறது. மலையகப் பெருந்தோட்ட பிரதேசங்களை
அபிவிருத்தி செய்வதற்கு இந்த அதிகார சபையையும் பயன்படுத்திக் கொள்ள
முடியும். ஆனால் இந்த சபை மலையக பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வானளாவ
அதிகாரம் படைத்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார
சபைக்கு இதுவரையில் அரசாங்கம் ஒதிக்கியுள்ள பணம் மூன்று மில்லியன் ரூபாய்
மட்டுமே. இந்தப் பணத்தை வைத்து சில காரியாலய அறைகளை
அமைத்திருக்கிறார்கள்.

இது மட்டும்தான் இந்த அதிகார சபை இதுவரை
மேற்கொண்டு இருக்கின்ற அபிவிருத்தி வேலையாகும். பெருந்தோட்டப்
பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையில்
இன்றுவரை ஒரே ஒரு முழு நேர நிறைவேற்று அதிகாரி மட்டுமே பணிபுரிந்து
வருகிறார். இவருக்கும் அமைச்சில் இருந்து மாதாந்த வேதனம்
வழங்கப்படுகிறது. அதிகாரசபைக்கு 27 ஊழியர்கள் கொண்ட பணியாளர் குழுவுக்கு
ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் அவர்களை நியமிப்பதற்கு
நிதியமைச்சர் இருந்து எவ்விதமான அங்கீகாரமும் அதிகாரசபைக்கு
கிடைக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களாக அமைச்சுக்களின் பிரதிநிதிகளாகவும்
அமைச்சரின் பிரதிநிதிகளாகவும் நியமனம் பெற்ற அதிகாரிகள் கூடி கலைந்து
சென்றதை தவிர வேறு குறிப்பிடத்தக்க விடயங்களும் இந்த அதிகார சபையில்
இதுவரை நடக்கவில்லை.

ஆனால் முன்னாள் அமைச்சரின் சகாக்கள் இந்த அதிகார
சபையை பயன்படுத்தி அளவுக்கதிகமான விளம்பரம் தேட முற்படுகின்றனர்.
பெருந்தோட்டங்களில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்த அதிகாரசபைக்கு
எவ்விதமான நிதி ஒதுக்கீடுகளும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால்
வழங்கப்படவில்லை. அத்துடன் இந்த அதிகார சபையை கொண்டு நடத்துவதற்கான ஆள்
அணியினரை நியமிப்பதற்கான அதிகாரமும் வழங்கப்படவில்லை. இதனால் இந்த சபை
இதுவரை இயங்காமல் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.‌
அதிகார சபைக்கான ஆளணியையும். அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான
நிதியினையும் அரசாங்கத்தோடு பேசி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெற்றுக்
கொண்டே இந்த பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள்
அபிவிருத்தி அதிகார சபை இயங்க வைக்க வேண்டியிருக்கிறது. எனவும்
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Leave a Reply

error: Content is protected !!