முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொட்டக்கலை சுரங்கத்தை வண்ணமயமாக்கும் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ள மலையக சிறகுகள் அமைப்பு!!

கொட்டக்கலை சுரங்கத்தை வண்ணமயமாக்கும் முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ள மலையக சிறகுகள் அமைப்பு!!

சுவரொட்டிகள் இல்லாத சுத்தமான சூழலை உருவாக்கும் தொணிப்பொருளின் கீழ் இ தொ காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு அமைய மலையக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் மற்றும் இன , மத கலாசாரங்களை பிரதிபலிக்கும் ஓவியங்கள் கொட்டகலை நகர் மற்றும் சுரங்க பாதை ஹட்டன் டெலிகொம் மதில்சுவர் ஆகியவற்றில் இளைஞர் யுவதிகளால் வரையப்பட்டு வருகின்றன.

இ.தொ.காவின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தவிர்க்க முடியாத காரணங்களினால் வெளி பிரதேசத்தில் இருப்பதால் கொட்டகலை சுரங்க பாதையில் இடம்பெறும் வர்ணம் தீட்டும் பணிகளை இ.தொ.காவின் இளைஞர் அணி விளையாட்டு துறை பொறுப்பாளர் நிஷாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

இவ் வர்ணம் தீட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு உணவு ஆகாரங்களை மற்றும் இதற்கு தேவையான வர்ணங்களை வழங்கி உதவி புரியும் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர்களான பாலசுப்ரமணியம் மற்றும் நேசன் அவர்களுக்கும் இ தொ கா இளைஞர் அணியின் பொது செயலாளர் திரு ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க வர்ண பூச்சுகளை அனுசரணை செய்த “மலையக சிறகுகள் ” அமைப்பிற்கும் பிரதேச இளைஞர் , யுவதிகள் சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

 

தகவல்: நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

error: Content is protected !!