முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கடந்த அரசாங்கத்தில் போது தேனீர் கோப்பை வழங்கிய போது வாய்திறக்காத ராதாகிருஸ்ணன் தற்போது மலையக சாதனையாளர்களை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது!!

கடந்த அரசாங்கத்தில் போது தேனீர் கோப்பை வழங்கிய போது வாய்திறக்காத ராதாகிருஸ்ணன் தற்போது மலையக சாதனையாளர்களை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது!!

சர்வதேச போட்டிகளில் பதங்களை வென்ற மலையக வீரர்களுக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென தற்போது ராதாகிருஸ்ணன் கூறியுள்ளமை வேடிக்கை அளிப்பதாக இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் உலக ஆணழகன் போட்டியில் நாட்டிற்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த ராஜ்குமாருக்கு தேனீர் கோப்பையை வழங்கி வழங்கிய போது எவ்வித கருத்தும் தெரிவிக்காத ராதாகிருஸ்ணன் தற்போது மலையக சாதனையாளர்கள் பற்றி எவ்விதத்தில் நியாயம். அதுமட்டுமல்ல ராஜ்குமாருக்கு வீடு தருவதாகவும் ஏமாற்றினர்.ஆனால் இ.தொ.கா ராஜ்குமாருக்கு முழு ஆதரவையும் நிதியையும் வழங்கி அவர் வெற்றி பெருவதற்கு முழுமையான ஆதரவை வழங்கியது.

அதுமட்டுமல்ல மலையக சிறகுகள் அமைப்பின் ஊடாக பூண்டுலோயா விஜிந்த்,அஜந்தன் மஹாலிங்கத்தின் மாணவர்களையும் ஊக்குவிக்க பல நிதி உதவிகளை புரிந்தது.இன்னும் மலையகத்தில் ஒளிந்துக்கிடக்கும் சாதனையாளர்களை வெளியில் கொண்டுவர தயாராக இருக்கின்றோம்.இவ்வரசங்காத்தினூடாக பல உதவிகளையும் பெற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளோம்.எனவே தேனீர் கோப்பையை பெற்றுக்கொடுத்து விட்டு இன்று அரசாங்கம் உதவிப்புரிய முன்வரவேண்டுமென்பது வேடிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தில் மலையக வீரர்களை சாதனையாளராக்கும் நடவடிக்கையில் ஈடுபட தயாராக உள்ளோம்.கடந்த அரசாங்கத்தை போல இவ்வரசாங்கம் மலையக சாதனையாளர்களை ஏமாற்றாது.அதற்கான முழு பங்களிப்பை இ.தொ.காவும் இ.தொகாவோடு இணைந்து இ.தொ.கா இளைஞரணியும் முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்.

Leave a Reply

error: Content is protected !!