அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக அதிகாரசபையினை கைவிட வேண்டாம்!!

அரசியல் காழ்ப்புனர்ச்சி காரணமாக அதிகாரசபையினை கைவிட வேண்டாம்!!

இன்று வீதிகளை திறந்து மக்கள் கைகளில் ஒப்படைக்கும் போது மக்களின் கோரிக்கையாக இருப்பது இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். என்பது தான். அதுதான் இன்றுள்ள தேவையும் கூட. இப்போது எமது மக்களின் தேவைகள் மாறியுள்ளன..இதுவே ஐந்தாண்டுகளுக்கு முன்பாக இருந்திருந்தால் அரசியலின் பெயரில் வேனும் என்றால் இந்த கோயிலுக்கு கம்பம் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது சேகண்டி,மணி போன்ற பொருக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.ஆகவே கம்பம் சேகண்டி,மணி சங்கு கொடுக்கின்ற அரசியலினை மாற்றி அரச சேவைகள் தோட்டத்திற்கு வர வேண்டும். என்பதனை செய்தும் காட்டியிருக்கிறோம்.அவற்றை செய்வதற்கான அடிப்படை சட்டங்களை உருவாக்கினோம். என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
மஸ்கெலியா வலதல தோட்டத்திற்கு செல்லும் காபட் வீதியினை நேற்று (23) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்…
நாங்கள் பிரதேச சபை சட்டங்களை மாற்றினோம். பிரதேச சபைகளை அதிகரித்தோம்.பிரதேச செயலகங்களை அதிகரித்தன் மூலம் எவ்வாறு எமது மக்கள் பொது நீரொட்டத்துக்குள் எமது மக்களை உள்வாங்கலாம் என்பதற்காகவே இதனை செய்தோம்.

இன்று மலையக அபிவிருத்தி அதிகார சபை வெறும் பெயர் பலகை என்று ஒருவர் கூறியிருக்கிறார்.அப்படியென்றால் அவருக்கு அந்த சட்டம் தெரியாது என்று அர்த்தம்.அல்லது அதை பற்றி தெரிந்து கொள்ளவில்லை. என்று அர்த்தம் அல்லது அதற்கு விருமில்லை என்று அர்த்தம்.எங்கள் மீதுள்ள காழப்;புனர்ச்சி காரணமாக எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய அதிகார சபையினை கைவிட வேண்டாம் என நான் அவர்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.அது மிக முக்கிய மான உரிமை. இன்று எப்படி வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த வீதியினை அபிவிருத்தி செய்ததோ மலையக அபிவிருத்தி அதிகார சபையினை கையில் எடுத்து வேலை செய்யத் தொடங்கிளனால் .அதே போன்று நீக்கள் கேட்கும் இபோச சபை, பஸ்.மின்சாரசபை தபால் திணைக்களம,போன்ற அத்தனை பொது திணைக்களங்களும்; சபைகளும் மலையக அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மலையக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சட்டத்தினை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம.;

எனவே அந்த சட்டத்தனை கைவிடக்கூடாது.அந்த சட்டத்தினை எடுத்து வாசிக்க வேண்டும். எந்த அரச நிறுவனங்கள் மலையக அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும். அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.2018 ம் ஆண்டு 30 இலக்க பிரதேச சபை சட்டம் உருவாக்கப்;பட்டதோடு,அதே நாளில் 32 இலக்க சட்டமாக பெருந்தோட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.அதில் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் இதன் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக வருகிறார்கள்.

அதில் மலையக பணிப்பாளர் சபை கூடி ஒரு அபிவிருத்தியினை முன்னெடுக்குமானால் அதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சுகாதார சபை தபால் திணைக்களம் என அத்தனையும் வரும் இப்படி ஒன்றிணைக்கப்பட்ட சேவையினை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக நாங்கள் அதிகார சபையினை உருவாக்கினோம்.ஆகவே அந்த அதிகார சபை உருவாக்கி ஒரு மாதகாலத்திலேயே கடந்த வருட வரவு செலவு திட்டத்திற்கு முன் அரசாங்கம் களவாடப்பட்டு சதிபுரட்சியின் காரணமாக அமைச்சு பதவிகள் இழந்ததனால் நிதியனை எமக்கு கொண்டு வர முடியாமல் போனது.

ஆகவே 2019 வரவு செலவு திட்டம் கொண்டுவரப்படாமையினால் இதற்கான நிதி கொண்டுவர முடியாமல் போயின.எனினும் வரவு செலவு திட்டத்தில் இந்த அதிகார சபைக்கு நிதி ஒதுக்குவதற்காக குறிப்பிடப்பட்டுள்ளமை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்ற வெற்றியாகும். ஆகவே யார் அமைச்சுப் பதவியிலிருதாலும் இதற்கான வேகைளை முன்னெடுத்து எமது மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாம் கடந்த காலங்களை போன்று வெற்றிபெற்று எமது மக்களின் தேவைகளை நிறைவேற்ற குரல் கொடுப்போம் என்பதனை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 89 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!