அக்கரபத்தனை பிரதேச சபையின் நடப்பு ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை முழுமையாக சபையில் சமர்பிக்க கோரிக்கை!!

அக்கரபத்தனை பிரதேச சபையின் நடப்பு ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை முழுமையாக சபையில் சமர்பிக்க கோரிக்கை!!

அக்கரபத்தனை பிரதேச சபையானது உருவாக்கப்பட்டு 19 மாதங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் சபையின் 2020 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும்  டிசம்பர் மாதம் 27 ம் திகதி சபையில் சமர்பிக்கபட்டு அங்கிகாரம் கோரப்படவுள்ளது.இந்நிலையில் இன்றைய தினம் (23/12/2019) அக்கரபத்தனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை தலைவர் கதிர்ச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.இவ் அமர்வில் கலந்துகொண்ட எதிர்கட்சி உறுப்பினர் சிவானந்தன் அவர்களினால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்,அடுத்த வருடத்திற்கான வரவு-செலவு திட்டம் சமர்பிக்கப்பட முன்  நடப்பு வருடமான 2019 ம் ஆண்டின் வரவு-செலவு அறிக்கைகளை முழுமையாக சமர்பிக்குமாறு சபை தலைவரிடம் உறுப்பினர் சிவானந்தன் அவர்களினால் கோரிக்கை முன்வைக்கப்படதோடு,வரவு-செலவு திட்டம் என்பது வெறுமனே ஏடுகளிள் மாத்திரம் பதியப்பட்டு பின் நடைமுறைப்படுத்தபடாமல் இருந்தால் அது சபைக்குறிய நியதி அல்ல எனவும்,கடந்த வருடம் சமர்பிக்கபட்டு அங்கிகாரம் வழங்கப்பட்ட 2019ம் ஆண்டு வரவு-செலவு திட்டங்களிள் முன்னெடுக்கபட்ட செயற்திட்டங்கள்,மக்களுக்கு முன்னெடுத்துள்ள சேவைகள் தொடர்பாகவும் முன்னெடுக்கமுடியாமல் போன செயற்திட்டங்கள் தொடர்பாகவும் அறிக்கைகளை சமர்பிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.அத்தோடு அக்கரபத்தனை பிரதேச சபைகுட்பட்ட பகுதிகளிள் காணப்படும் வாடகை முச்சக்கரவண்டிகளை சபையில் பதிவு செய்வது தொடர்பாக முறையாக ஆராய்ந்து முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பாதகமற்ற வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.அத்தோடு நாகசேனை,ஹில்டனோல் ஆகிய இரண்டு கிராமசேவகர் தொகுதிகளுக்கு ஒரு கிராம உத்தியோகஸ்தரே சேவையில் உள்ளார்.ஆகவே இக்கிராம சேவகரால் பொதுமக்களுக்கு முறையாக சேவையை வழங்க முடியாத சூழ்நிலை காணப்படுவதால் மேலும் ஓர் கிரமாசேவை உத்தியோகஸ்தரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கையை இன்றைய சபை அமர்வில் உறுப்பினர் சிவானந்தன் முன்வைத்தார்.

 

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

 108 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!