முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நாவலபிட்டி வனபகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

நாவலபிட்டி வனபகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் 31.12.2019.செவ்வாய்கிழமை முற்பகல் 11.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நாவலபிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் கிடந்த சடலத்தின் வலது கை ஒரு பகுதியினை நாய் ஒன்று எடுத்து வந்து குறித்த பகுதியில் உள்ள கற்பாறையில் விட்டு சென்றதை இனங்கண்ட பிரதேச மக்கள் நாவலபிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவம் இடத்திற்கு வருகை தந்த நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளார்

சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு நாவலபிட்டி நீதிமன்ற நீதவான்
வரவலைக்கப்பட்டு மரண விசாரனைகள் இடம்பெற்றவுடன் சடலம் சட்டவைத்திய
அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக நாவலபிட்டி ஆதாரா வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு சடலமாக மீட்கபட்ட நபர் 58வயதுடையவர் எனவும்
குறித்த சடலம் யார் என அடையாளம் கானப்படவில்லையென பொலிஸாரின் ஆரம்பகட்ட
விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!