முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 2,500 ரூபாயை நிவாரணமாக வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்! ; பிரதமர்

2,500 ரூபாயை நிவாரணமாக வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம்! ; பிரதமர்

Discover More Here பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாயை நிவாரணமாக வழங்குவதற்கு, முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்ட கம்பனிகளால் கோரப்பட்டுள்ள கடன் தொகையை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, வங்கிகளுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

buy Pregabalin தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் தீர்வுகாணும் நோக்கில் பிரதமர் ரணில் விகிரமசிங்ஹ தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.

Source குறித்த சந்திப்பில், பெருந்தோட்டத்துறை அமைச்சின் அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

மேலும் இந்தச்சந்திப்பில் கலந்துகொண்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிகள், தனியார்த் துறையினருக்கு வழங்கும் 2,500 ரூபாய் சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்குவதற்குத் தாங்கள் தயார், எனினும், தாங்கள் கோரியிருக்கின்ற கடன்தொகையை வழங்குவதற்கு வங்கிகள் ஆக்கபூர்வமான நடவடிகைகள் எதனையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போதே, கம்பனிகள் கோரியிருக்கின்ற கடன்தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு, பிரதமர் மேலும் கட்டளையிட்டுள்ளார்.

சம்பள அதிகரிப்பை வழங்க, திறைசேரி ஒரு பில்லியன் ரூபாயை ஒதுக்கியிருப்பதாகவும், சம்பள அதிகரிப்புத் தொடர்பில் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!