
பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் முத்தேர் பவணி
பொகவந்தலாவ ஸ்ரீ ஈழத்து பழணி தண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் முத்தேர் பவணி 01.02.2020.சனிகிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது இதன் போது காலையில் பிரதான ஆலயத்தில் விநாயகர் அம்பாள் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் வசந்த மண்டப பூஜைகள் ஆலயத்தின் பிரதான குருக்கள் கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து விநாயகர் அம்பாள் முருகன் ஆகிய மூன்று தெயவங்களும்
ஆரோகரா என்ற நாமத்தோடு மேளதாளங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி பவணிகள் ஊடாக
பொகவந்தலாவ பிரதான நகரில் அலங்கரித்து வைக்கபட்ட முத்தேர்பவணியில்
வைக்கபட்டு பின்னர் பக்தர்கள் சூழ முத்தேர் பவணியினை வடம்பிடித்தனர்
முத்தேர் பவணி பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து
பொகவந்தலாவ நகரம் முழுவதும் உள் வீதி ஊர்வலம் வந்தது இதேவேலை கலை கலாசார
விழுமியங்களை பிரதிபலிக்க கூடியவருமாறு மேல வாத்தியங்களோடு காவடி நடனம்
புரவி நடனம் குயில் ஆட்டம் குதிரை ஆட்டம் எனபன பொகவந்தலாவ நகரை
அலங்கரித்தது.
பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்
653 total views, 2 views today