அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ!!

அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதியில் பாரிய தீ!!

அட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் பிறப்பிடமான அட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு 13.02.2020 அன்று விஷமிகளால் வைக்கப்பட்ட தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் பல ஏக்கர்கள் எரிந்து சாம்பலாகின.

தீ காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள் அற்றுப்போகும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.

இந்த தீயினால் எமது நாட்டுக்கே உரியதான அரிய வகை தாவரங்கள், வன வலங்குகள் , உயிரினங்கள், உட்பட மருந்து மூலிகைகள் ஆகிய அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது வறட்சியான காலநிலை மலையகப்பகுதியில் நிலவி வருவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சமபவங்களும் அதிகரித்துள்ளன.

எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால் காட்டுப்பகுதியில் வாழும் கொடிய உயிரினங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன.

mersin escort

எனவே இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் செயப்படுமாரும் காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாரும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் அட்டன், பொகவந்தலாவ, வட்டவளை, எல்ல, கண்டி, இறம்பொடை உட்பட 7 இடங்களில் இவ்வாறு காட்டுத் தீ பரவியுள்ளன.

 

எஸ். சதீஸ், க.கிஷாந்தன்)

 367 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!