முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கண்டி மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமிழர்களின் உரிமை மட்டுமல்ல அது எம் சமூகத்தின் அடையாளத்தையும், சுயகௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது!!

கண்டி மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமிழர்களின் உரிமை மட்டுமல்ல அது எம் சமூகத்தின் அடையாளத்தையும், சுயகௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது!!

“கண்டி மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் என்பது தமிழர்களின் உரிமை மட்டுமல்ல அது எம் சமூகத்தின் அடையாளத்தையும், சுயகௌரவத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. எனவே, பொதுத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று இம்முறையும் அதனை எங்கள் தளபதி நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உறுதிப்படுத்துவார். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்.

எனினும், தமிழ் வாக்குகளை சிதறடித்து கண்டி மாவட்டத்தில் தமிழர்களின் உரிமைக்கு – அடையாளத்துக்கு சமாதிகட்டுவதற்கு பேரினவாதிகள் திட்டம் தீட்டிவருகின்றனர். இதற்காக பிறப்பால் மட்டுமே தமிழரான சில அரசியல் கைக்கூலிகள் தேர்தலில் களமிறக்கப்படலாம். இப்படியான கறுப்பாடுகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் அது தற்கொலைக்கு ஒப்பான செயலாகிவிடும்.”

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பாத்த ஹோவாஹெட்ட பிரதேச சபை உறுப்பினர் கணேசன் பெரியசாமி தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (13.02.2020) நடைபெற்ற பொதுத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிட்ட கணேசன் பெரியசாமி மேலும் கூறியதாவது,

” இலங்கையின் வரலாற்றுடன் தொடர்புபட்ட மாவட்டமே கண்டி மாவட்டமாகும். கண்டி ராஜ்ஜியத்தை கடைசியாக ஆண்ட மன்னர்கூட தமிழர்தான். 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலின்போதுகூட கண்டி மண்ணிலிருந்து தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

1948 இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் 3 தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்தோம்.

எமக்கு வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது. எனினும், அதன்பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.

எனினும், தலைவர் மனோ கணேசனின் ஆசியுடன் 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தளபதி வேலுகுமார் களமிறங்கி வெற்றி பெற்று 19 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தினார். தமிழ் மக்களும், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஓரணியில் திரண்டு வாக்களித்தனர்.

இதன்காரணமாகவே இன்று கண்டி மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலை அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையுடன் தனி வீட்டுத் திட்டங்கள் என தளபதியின் புரட்சிகரமான சேவைகளின் பட்டியல் நீள்கிறது.

அதுமட்டுமல்ல சலுகைகளுக்கு விலைபோகாமல், கொள்கை அடிப்படையில் அரசியல் நடத்தியதாலும், அபிவிருத்தி போல் உரிமை அரசியலுக்கும் உரிய இடத்தை வழங்கியதாலும் மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். எனவே, இம்முறை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளால் அவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். அதனை மக்கள் செய்வார்கள்.

எனவே, இதனை சூழ்ச்சிகள் மூலம் குழப்பியடித்து, தமிழர்களின் குரல்வளையை நசுக்குவதற்கு சில பேரினவாதிகள் சக்கரை வியூகம் வகுத்து செயற்படுகின்றனர். இதற்கு எம்மவர்கள் சிலரும் துணைபோய், தமிழ் இனத் துரோகிகளாக மாறி, அற்பசொற்ப சலுகைகளுக்காக தமிழர்களின் முதுகில் குத்த முயற்சிக்கின்றனர்.

இதன்காரணமாகவே தேர்தல் காலத்தில் மட்டும் சிலருக்கு கண்டி மாவட்டம்மீது பற்று ஏற்படுகின்றது. இம்முறை சில பரசூட் வேட்பாளர்கள்கூட இங்கு வரலாம். அத்தகைய கறுப்பாடுகளுக்கு தக்க பாடம் புகட்டுவதற்கு நாம் தயாராக வேண்டும். எத்தகைய சூழ்நிலையிலும் எமது உரிமையை, சமூகத்தின் அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது.” என்றார்.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle