முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > மாமியாரிடம் பலாத்காரம் மருமகனின் உதட்டை கடித்து துப்பிய மாமியார்!

மாமியாரிடம் பலாத்காரம் மருமகனின் உதட்டை கடித்து துப்பிய மாமியார்!

வயோதிப மாமியாரிடம் பாலியல் பலாத்கார முயற்சி செய்த மருமகனின் கீழ் உதட்டை கடித்து துப்பிய மாமியார் பற்றிய செய்தியொன்று வெளியாகியுள்ளது.

மேற்படி சம்பவம் கிரிந்திவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது மேற்படி நபரின் மனைவி வெளிநாடொன்றில் தொழில்புரிந்து வருகிறார் அவரின் மகளை கவனிப்பதற்காக நபரின் மாமியார் வீட்டில் தங்கி பராமரித்து வருகிறார், சமவத்தினம் அவரது மகள் பிரத்தியேக வகுப்புக்கு சென்றிருந்தவேளை குறித்த நபர் மாமியாரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் இந்த சமயத்தில் ஆத்திரமுற்ற மாமியார் மருமகனின் உதட்டை கடித்து இரண்டாக்கியுள்ளார்.

இதன் பின்னர் தப்பிச்சென்ற மாமியார் தனது இளைய மகளுடன் வந்து  கிரிந்திவெலப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடு செய்துள்ளார்.

கைது செய்யும் போது சந்தேகநபரின் கீழ் உதட்டின் ஒரு பகுதியைக் காணவில்லையென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிந்திவெலப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!