சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்கள் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்!!

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்கள் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளனர்!!

சுகாதார முறைமையினை கடைபிடிக்காது மேலதிக வகுப்புகளை இரகசியமாக நடாத்தி
வந்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்கள் சுயதனிமைபடுத்தலுக்கு
உட்படுத்தபட்டுள்ளனர்-  மேலதிக வகுப்பு நடாத்தி வந்த வகுப்பறைக்கு சீல் வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று வைரஸ் காரனமாக நாட்டில் உள்ள அனைத்து
பாடசாலைகளுக்கும் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளபோதிலும்
தலவாகலை பகுதியில் இரகசியமாக மேலதிக வகுப்புகளை நடாத்தி வந்த இரண்டு
ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்கள் சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டு
மேலதிக வகுப்பினை நடாத்தி வந்த வகுப்பறையினை பொது சுகதார பரீசோதர்களால்
சீல் வைக்கபட்டுள்ளதாக தலவாகலை லிந்துளை நகரசபையின் தலைவர் அசோக்கசேபால
தெரிவித்தார் இந்த சம்பவம் 20.05.2020. புதன்கிழமை இடம் பெற்றதாக அவர்
மேலும் தெரிவித்தார்

தலவாகலை லிந்துளை நகரசபைக்கு உட்பட்ட தலவாகலை பகுதியில் இரண்டு ஆசிரியர்கள்
ஒன்றினைந்து சமூக இடைவெளி மற்றும் சுகதார முறைமையினை கடைபிடிக்காது உயர்தர
மாணவர்கள் 14பேருக்கு IT வகுப்பு நடாத்தி வந்தமை தொடர்பில் தலவாகலை
லிந்துளை நகரசபை தலைவருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த
இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்களையும் தலவாகலை லிந்துளை நகரசபைக்கு
அழைத்து விசாரனைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பில் தலவாகலை  பொது சுகாதார
பரீசோதகர் மற்றும் தலவாகலை பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டதை
தொடர்ந்து குறித்த இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 14மாணவர்களும் அவர்களுடைய
வீடுகளில் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

குறித்த வகுப்புகளை நடாத்த கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு இரண்டு
ஆசிரியர்களும் தலவாகலை லிந்துளை நகரசபையில் அனுமதி பெற்றுள்ள போதிலும்
கொரோனா தொற்று ஏற்பட்மையினால் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள்
நடாத்த அரசாங்கத்தினால் தடைசெய்யபட்டுள்ளது. இதேவேலை சுகாதார அமைச்சின்
அறிக்கை கிடைக்கபெற்றவுடனே மேலதிக வகுப்புகளையோ பாடசாலைகளையோ நடாத்த
முடியும் எனவே அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களை மீறி மேலதிக வகுப்புகளை
நடாத்தியமையினாலும் சுகாதார முறைமையினை மேற்கொள்ளாமையினாலுமே இவர்கள்
சுயதனிமை படுத்தபட்டதாக பொது சுகாதார  பரீசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்
இதேவேலை தனிமைபடுத்தபட்டவர்களுல் ஒரு ஆசிரியர் லிந்துளை பொலிஸ்
பிரிவிற்கு உட்பட்டவரும் மற்றுமொரு ஆசிரியர் மஸ்கெலியா
பொலிஸ்பிரிவிற்குட்பட்டவரும் 14மாணவர்களும் தலவாகலை லிந்துளை
நகரசபைக்குட்பட்டவர்கள் என பொதுசுகாதார பரீசோதகர்களின் ஆரம்பகட்ட
விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 529 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!