போடைஸ் பகுதியில் 120 பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு இன்றும் வழங்கப்பட்டன.தோட்டத்தொழிலாளர்கள் வேலையற்ற இளைஞர்கள் பலரும் பாராட்டு!!

போடைஸ் பகுதியில் 120 பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு இன்றும் வழங்கப்பட்டன.தோட்டத்தொழிலாளர்கள் வேலையற்ற இளைஞர்கள் பலரும் பாராட்டு!!

கொரோனா தொற்று நாட்டில் பரவல் காரணமாக வேலையிழந்தவர்கள் வேலையின்றி வீட்டில் இருப்பவர்கள் மற்றும் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுத்து வந்தது.
மலையகத்தில் பல பகுதிகளில் இந்த 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லையென பலரும் குற்றஞ்சுமத்தி வந்தனர்.இந்த 5000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.இந்நிலையில் போடைஸ்,இன்வரி, ஒட்டரி,இஞ்சஸ்சிரி ஆகிய பிரதேசங்களில் வேலையிழந்துள்ள இளைஞர்களுக்கும் வேலையில்லாது வீட்டிலிருக்கும் முதியவர்களும் வருமானமற்ற குடும்பஙங்களுக்குமென சுமார் 120 பேருக்கு இன்றைய தினம் இந்த கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்பட்டன.

மேலும் 120 பேருக்கு எதிர்வரும் தினங்களில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராமசேவகர் தெரிவித்தார்.
இதுகுறித்து கொடுப்பனவு பெற்றவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கொழும்பிலிருந்து வந்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகின்றன.எங்களுக்கு எவ்வித வருமானமும் இல்லை ரொம்பக்கஷ்டத்திற்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றோம். இந்நிலையில் இந்த கொடுப்பனவு பெற்றுக்கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதேநேரம் இதனை பெற்றுக்கொடுத்த அரசாங்கத்திற்கும் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன் என தெரிவித்தார்.
இதுகுறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் நான் வேலையின்றி வீட்டில் தான் இருக்கின்றேன்.எனக்கு எவ்வித வருமானமும்; இல்லை இந்நிலையில் இந்த கொடுப்பனவு பெற்றுக்கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர்மேலும் தெரிவித்தார்.

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 59 total views,  1 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!