தற்கொலை முயற்சித்த யுவதியை காப்பற்ற சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி மரணம்.

தற்கொலை முயற்சித்த யுவதியை காப்பற்ற சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி மரணம்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தற்கொலை முயற்சித்த யுவதியை காப்பற்ற சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி மரணமடைந்த சம்பமொன்று பதிவாகியது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற இரு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கியதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனின் தேடும் பணி இன்று மினசாரசபை அதிகாரிகள் பொலிஸார் கொட்டும் மழையில் தேடுதல் ஈடுபட்டனர். இரண்டு மணித்தியாலங்கள் தேடுதலி;ன் பின் குறித்த நபரின் சடலம் சுமார் இன்று மாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டன. இவரது சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தற்கொலை செய்து கொள்வதற்காக நீர்த்தேகத்தில் பாய்ந்த பாகுறித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார்.

இச்சம்பவம் (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு நீரில் மூழ்கியவர் 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸாரும் கடற்படையின் சுழியோடிகளும் இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

‘ தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்தே குறித்த யுவதி நீர்த்தேக்கத்துக்குள் குதித்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர்இ யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.
நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் குதித்து யுவதியை காப்பாற்றியுள்ளார்.

எனினும் காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயுள்ளார்.
காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடரபான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 811 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!