‘தரிசு நிலங்களை குத்தகை முறையில் பகிர்ந்தளிக்க திட்டம்’

தோட்டங்களில் காணப்படும் தரிசுநிலங்களை அத்தோட்டத்திலுள்ள கூட்டுறவுசங்கங்களின் ஊடாக குத்தகை முறையில் மக்களுக்குபெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.” – என்று இ.தொ.காவின் உப செயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கோவிட் 19 வைரஸ் பாதிப்பின் காரணமாக பெருந்திரளான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு வருகைதந்த வண்ணம் உள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் புசல்லாவை பிரதேசத்தில் பெருந்திரளான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் விவசாயம் மற்றும் சிறுகைத்தொழில்களில் ஈடுபடுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டியவண்ணம் உள்ளனர்.

அதனடிப்படையில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைவாக புசல்லாவை பெருந்தோட்ட யாக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமிந்த மற்றும் கண்டிமாவட்டத்திற்கு உட்பட்ட தோட்டங்களின் உள்ள முகாமையாளர்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணி பொதுசெயலாளர் ஜீவன் தொண்டமான் , பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கண்டி பிராந்தியத்தின் பணிப்பாளர் முனவீர, அந்நிதியத்தின் விசேடசெயல் திட்டங்களுக்கு பொறுப்பான ரத்வத்த, இ.தொ.காவின் பிரதேச சபை உறுப்பினர்களான இளங்கோவன், செல்லமுத்து,
மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் தோட்டங்களில் காணப்படும் தரிசுநிலங்களை அத்தோட்டத்திலுள்ள கூட்டுறவுசங்கங்களின் ஊடாக குத்தகை முறையில் மக்களுக்குபெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகளும் அதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகளையும் விவசாயம், பண்ணை மற்றும் கைத்தொழில் போன்றவற்றை மேற்கொள்வதற்கான அறிவுரைகள் மற்றும் வசதிவாய்ப்புக்களை அரசாங்கத்தின் ஊடாகபெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் பெருவாரியாக கலந்துரைலயாடப்பட்டது.

மேலும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஒருசுழற்சி முறைபயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளவும் வருடம் முழுவதும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும்படியான செய்முறைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையில் முதல் கட்டமாக இரண்டு தோட்டங்களில் இம்முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் தோட்டதொழிலாளர்களும் இளைஞர் யுவதிகளும் அந்ததோட்டங்களை அண்மித்துள்ள கிராமங்களும் மற்றும் தோட்டகம்பனிகளும் நன்மையடையும் விதமாக ஒருதிட்டம் ஜீன் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.” – என்றுள்ளது.

 

(க.கிஷாந்தன்)

 208 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan