
பள்ளிக்கூட விடுதிகளில் பாதி வாழ்க்கை அப்பா; அமரர் ஆறுமுகனுக்கு மகள் நாச்சியார் வரைந்த இறுதி அஞ்சலி !
மத்திய கிழக்கில் ஒரு வைத்தியராக பணியாற்றும் அமரர் ஆறுமுகன் அவர்களின் புதல்வியான கோதைநாச்சியார் அவர்கள் தந்தையின் மரணத்தை அடுத்து மஸ்கட்டில் இருந்து கேரளாவுக்கு வந்து அங்கிருந்து தனியார் விமானம் மூலம் இலங்கை வந்த அவரை மரணச்சடங்கில் பங்குகொள்ள அனுமதியளிக்கப்படவில்லை 14 நாட்கள் கட்டுநாயக்க பகுதில் உள்ள விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவர் தனது அப்பாவை நினைவூட்டி எழுதிய அஞ்சலி கடிதம் .
அன்புள்ள அப்பாவுக்கு நீங்கள் எம்மைவிட்டு பிரிந்துவிட்டீர்கள் என்ற பயங்கரமான செய்தி கிடைத்தது நிறுத்திவைக்க முடியாத கண்ணீருடன் பல மணித்தியால பயணத்தின் பின்னர் இலங்ககையை வந்தடைதந்ததும் தனிமைப்படுத்திக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டேன், உங்கள் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள வந்த எனக்கு இந்த நோயின் கொடூரம் தெரிந்த ஒன்றே.
நாளாந்தம் இந்த கொடிய நோய் என்ன செய்கின்றது என்பதையும் அத்துடன் காவுகொண்ட எண்ணிக்கையும் நான் அறிவேன், எனினும் எனது பகுத்தறிவற்ற கோபம் மருத்துவர் என்றவகையில் உணர முடிந்தது. ஒரு தேசமாக இதிலிருந்து மீள்வதற்கு இதை செய்தே ஆகவேண்டும். அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதோடு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும், எனினும் விலை மதிப்பற்ற தந்தையை இழந்த ஒரு மகளாக நான் கோபப்படுகிறேன். நான் உங்களுடன் இருக்கவேண்டும் என்ன செய்வது நான்கு சுவர்களுக்குள் முக கவசத்தோடு என் துயரை அ டக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். எது சரி என தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டிய கடமை எனக்கு உண்டு எல்லோருக்கும் உள்ள பொது விதியை மறுக்க முடியாது நீங்களும் இதற்கு உடன்படுவீர்கள் என்பதை அறிவேன்.
ஒரு தந்தையாக மூத்த மகளை மருத்துவராக்க வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறி இருந்தாலும் எனக்கு எங்கள் குடும்ப நிகழ்வுகள், ஒன்றுகூடல்கள் எதிலும் பங்குகொள்ள முடியாமல் உங்களோடு பலமுறை சண்டை பிடித்துள்ளேன், நான் வளர்ந்த பின்னர் எனது இரண்டாவது காதல் அவசரகால மருத்துவம் எனது முதல் காதல் உங்கள் மருமகன் தனிமையில் பல ஆயிர மைல்களுக்கு அப்பால் துயரோடு வாழ்கிறார், உங்கள் மருமகனோடு உங்களுக்கு இருக்கும் நெருக்கமான உறவை நான் விரும்பவில்லை அது பொறாமையாக கூட இருக்கலாம்” இதை ஒருநாள் உங்களிடம் சொல்ல வேண்டும் என இருந்தேன் எனினும் நான் அவசரகால மருத்துவராக பொறுப்பை கையேற்றபின்னர் அந்த தொழிலை நேசிக்க ஆரம்பித்தேன், எனது வாழ்வின் நோக்கத்தை முன்னரே கண்டறிந்தவர் நீங்கள்தான் அதை இப்போது உணர்கின்றேன்.
நீங்கள் அரசியலில் மிக சக்திமிக்கவர் என பல கட்டுரைகளில் வாசித்து இருக்கின்றேன் ஆனால் நான் மட்டும் உங்களைவிட்டு வெகுதூரத்தில்தான் இருந்தேன், பள்ளிக்கூட விடுதிகளில்தான் பாதி வாழ்க்கை வாழ்ந்தேன் இந்த வெற்றிடத்தை நீங்கள் ஒருபோதும் நீங்கள் நிரப்பவே இல்லை. எங்களோடு பூங்காவுக்கு வந்தபோது நீங்கள் எவ்வளவு குதூகலமாக சிறு பிள்ளையை போல ஊஞ்சல் ஆடி ரோலர் கோஸ்டுகளில் ஏறி விளையாடியதையும் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன்.
எங்களது பிறந்ததினத்தை பெரிய விழாபோல கொண்டாடி மகிழ்ந்தீர்கள் 6ஆம் வகுப்பு நண்பர்கள் இப்போதும் பேசும் அளவுக்கு அது பெருமையாக உள்ளது. நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள் நாச்சி” உனக்கும் எனக்கும் இருபது வயது மட்டுமே வித்தியாசம் அவரது 21ஆம் வயதில் நான் பிறந்தேன், எனது முதல் மகள் வயிற்றில் உருவானபோது உங்களுக்கு அதை தெரிவித்தபோது நாச்சி நான் தாத்தாவாக விரும்பவில்லை என்பதாகும் எனினும் உங்கள் பேரப்பிள்ளைக்கு ஒரு அன்பான தாத்தவாக இருந்தீர்கள், உங்கள் புன்னகையை இப்போதும் ரசிக்கின்றேன், நீங்கள் சொல்லும் நகைச்சுவையை கேட்டு நாமும் சிரிக்க வேண்டும் என நாம் சிரிக்கும்வரை அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள் இந்த கடினமான உலகத்தில் பருமலையாக என்னோடு வலம்வந்தீர்கள் அந்த பலத்தை நான் இனி எங்கே தேடுவது? உங்கள் குளிர்ந்துபோன கரங்களை பற்றிக்கொண்டு கதறியல ஏங்குகின்றேன் எனது எண்ணங்கள் உங்களை சுற்றி சுற்றியே அலைபாய்கின்றது என்ன செய்வது எனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை. உங்கள் உடல் பேழையை சுற்றி சுற்றி வரும் மக்கள் கூட்டத்தை கண்டு அஞ்சுகிறேன் இந்த கொடிய கொரோனா பலரை ஆட்கொண்டுவிடலாம் என்ற அச்சத்தால் அடிக்கடி இதை தொலைப்பேசிவாயிலாக அறிவுறுத்திக்கொண்டே இருந்தேன்.
எனது தங்கையும் தம்பியும் நீங்கள் இல்லாத இந்த உலகத்தை எப்படி எதிர்க்கொள்ள போகின்றனர் என தெரியவில்லை? நீங்களும் கொள்ளுத்தாத்தாவும் அவர்களுக்கு துணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் விழித்தெழும் ஒவ்வொரு பொழுதும் நீங்கள் என் முன் பிரசன்னமாகி கொண்டுதான் உள்ளீர்கள், எப்போதும் கடினமான உழைப்போடு இருந்த நீங்கள் ஓய்வுகொள்ளுங்கள். இனி முக கவசம் உங்களுக்கு தேவையில்லை.
உங்களின் மிகவும் அன்புக்குரிய உங்கள் மகள் நாச்சியார்.
நன்றி டி பி எஸ் ஜெயராஜ் . தமிழாக்கம் கோவிந்தன்.
4,434 total views, 2 views today