முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் – இந்திய பிரதமர்

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் – இந்திய பிரதமர்

இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

குறித்த இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

இந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும். என மோடி தெரிவித்துள்ளார்.

விழாவில் கருத்துரைத்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல ஆண்டுகளாக இந்தியா – இலங்கை உறவு எவ்விதத் தடைகளுமின்றி சுமுகமாக நட்புறவுடன் இருக்கின்றமை குறித்து பெருமையடைகின்றோம் எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

error: Content is protected !!