மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் 30இலட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபா வழங்கப்பட்டுள்ளது- பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு.

மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் 30இலட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபா வழங்கப்பட்டுள்ளது- பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு.

மார்ச் 12 திகதி கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட  பாடசாலைகளை இன்று (29) ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளன.ஹட்டன் கல்வி வலயத்தினை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதுடன் 3537 ஆசிரியர்களும் 450 தரம் வாய்ந்த அதிபர்களும் கற்பித்தல் நட்வடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இவர்களின் பாதுகாப்பு கருதி  கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிந்துரைகளுக்கமைய பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் கை கழுவும் வேலைத்திட்டத்திற்காக மாத்திரம் 30 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இன்று பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து பாடசாலையில் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக மேற்பார்வை மேற்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு  கருதி சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்கள் அதிபர்கள் பெற்றோர்கள் உதவியாளர்கள் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆரம்ப பாடசாலைக்களுக்கு மாத்திரம் 3000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் முகக்கவசமின்றி வருகை தரும் பட்சத்தில் அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னேற்பாடாக செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தரும் போது மாணவர்கள் எதிர் நோக்குகின்ற சவால்களுக்கு முகம் கொடுத்து கல்வி நடவடிக்கை முன்னெக்கும் வகையில் அதிபர்கள் ஆசிரியர்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளனர். இந்த கல்வி வலயத்திலிருந்து கொவிட் 19 கட்டுப்படுத்தல் நிதியத்திற்குகாக 3 மில்லியன் ரூபாவினையும் நிர்வாக உத்தியோகஸத்தர்கள் ஒரு நாள் சம்பயத்தினையும் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நடவடிக்கைகள குறித்து கல்வி துறையினை சார்ந்த அனைவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 4,176 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!