அபிவிருத்தி திட்டங்களை செய்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே – புத்திரசிகாமனி புகழாரம!

அபிவிருத்தி திட்டங்களை செய்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே – புத்திரசிகாமனி புகழாரம!

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்தது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே என மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற வேட்பாளருமாகிய வடி வேல் புத்திரசிகாமனி தெரிவித்தார்.

நுவரெலியா கண்றி ஹவுஸ் சுற்றுலா விடுதியில் நேற்று (29 ) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஐக்கிய தேசிய கட்சிஅரசாங்கத்தினூடாகவே நுவரெலியா மாட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை நாம் பட்டியலிட்டுக் கொண்டே செல்ல முடியும். அன்று தோட்டப் புற பாடசாலைகளை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரே மலையகத்தில் கல்வி வளர்ச்சியடைந்தது. இன்று ஆசிரியர்கள்இ வழக்கறிஞர்கள்இ நீதிபதிகள்இ வைத்தியர்கள் என பலதுறைகளில் எம்மவர்கள் இருக்கின்றார்கள்.

நான் மனிதவள பொறுப்பு நிதியத்தின் தலைவராக 2019 டிசம்பர் வரை இருந்தபோது 7000 வீடுகளை அமைத்தேன். அதில் 4000 வீடுகள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினாலும் 3000 வீடுகள் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் அமைத்தேன். ஐக்கிய தேசிய கட்சி இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரை ஆட்சியில் இருந்திருந்தால் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்ற 3000 வீடுகளை கட்டி முடித்திருப்பேன்;.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலேயே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணிகள் வழங்கப்பட்டன. இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்தினாலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென தனியான காணிகள் நிரந்தரமாக வழங்கப்பட வில்லை. நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுத்தமான குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.
அதேபோல் 10 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்து 100 குழந்தை அபிவிருத்தி நிலையங்களை அமைத்தேன். அதுமட்டுமல்லாமல் கம்பெரலிய வேலைத்திட்டத்தினுடாக பெருந்தோட்டப் பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கப்பட்டன. ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஆட்சி காலத்திலேயே பெருந்தோட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகளை அதிகரித்தது. அதேபோல ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தமையினாலேயே இவற்றையெல்லாம் எம்மால் செய்ய முடிந்தது. அன்று பிரதேசபைகளினூடாக தோட்டப்பகுதிகளுக்கு வேலை செய்ய முடியாமல் இருந்ததை மாற்றியமைத்து பெருந்தோட்டப் பகுதிகளுக்குள் பிரதேச சபைகளினூடாக அபிவிருத்திகளை முன்னெடுக்க வழிசெய்தது. ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே.

எமது பிரஜாவுரிமையை பறித்தது என்று சொல்வார்கள் அதனை தீர்த்து வைத்ததும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தோட்டங்களை பொறுப்பேற்ற பின்னர் சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்ககளுக்கு 25 சதவீத சம்பள உயர்வு வழங்கினார்கள். அப்போது ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருந்தார்.

அதன் பிறகு அவ்வப்போது தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கினாலும் 1984 ம் ஆண்டு ஆண்இபெண்இசிறுவர் என்ற மூன்று வகையான சம்பளம் இருந்தது. சிறுவர் சம்பளம் ரூபா 8இ பெண் சம்பளம் ரூபா 12இ ஆண்கள் சம்பளம் 18 ஆக இருந்தது. அந்த காலப்பகுதியில் சம்பள உயர்வு வேண்டுமா? சமமான சம்பளம் வேண்டுமா? என ஜே.ஆர்.ஜெயவர்த்தன எங்களிடம் கேட்டார். நான் அப்போது இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திலே இருந்தேன். நான்இகாமினி திஸாநாயக்க.ராஜா செனிவிரட்ன ஆகியோர் ஜெ.ஆர். ஜெயவர்த்தனவுடன் பேசி சரி சமமான சம்பள தொகையை பெற்றுக்கொடுத்தோம்.

இவற்றை எல்லாம் செய்வதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தமையினாலேயே தலை இல்லாமல் வால் ஆட முடியாது. மலையகத்தில் 1992 ம் முதல் இன்றுவரையிலும் 17000 வீடுகளை ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்திலேதான் அமைத்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோது மாத்திரமே நுவரெலியா மாவட்டத்தில் இந்த அபிவிருத்திகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

( டி சந்ரு )

 326 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!