மலையக மக்கள் முன்னணி கட்சியினை வைத்து வியாபாரம் செய்வதாக அனுசா சந்திரசேகரன் குற்றச்சாட்டு!!

மலையக மக்கள் முன்னணி கட்சியினை வைத்து வியாபாரம் செய்வதாக அனுசா சந்திரசேகரன் குற்றச்சாட்டு!!

மலையக மகக்கள் முன்னணிளினை ஆரம்பிப்பதற்காக எனது தந்தை பட்ட கஸ்ட்டங்கள் ஒரு புறமிருக்க அவருடன் சேர்ந்;து பலர் பட்ட கஸட்டங்கள் நிறைய உள்ளன. சிலர் சிறைவாசம் அனுபவித்தார்கள்,இன்னும் சிலர் அடி உதைக்கு உள்ளானார்கள்,இன்றும் நீ மலையக மக்கள் முன்னணி காரன் தானே என்று அரசியல் பழிவாங்கலக்கு உள்ளான நிறைய பேர் உள்ளார்கள். இவ்வாறு பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி இன்று சரியான பாதையில் தான் போய் கொண்டிருக்கிறதா ? இதற்காக தானா மலையக மக்கள் முன்னணியினை ஆரம்பித்தீர்கள். என்று சிந்திக்க வேண்டும்.தந்தை இருக்கும் போது நிறைய வேளைத் ;திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.வீடமைப்பாக இருக்கலாம் மின்சார வசதியாக இருக்கலாம் தண்ணீர் ,கலாசார மண்டபங்கள், பாடசாலை பாதைகள் என அரசாங்க வேலை வாய்ப்புக்கள் ரயில்வே,பொலிஸ் சமூர்த்தி எத்தனையோ இடங்களில் எத்தனையோ வேலைத்திட்டங்களை தந்தை உருவாக்கிக்கொடுத்தார்.மலையக மக்கள் முன்னணியின் கொள்கையும் அதுதான் மக்க்ளுக்காக சேவை செய்வது. ஆதற்காகக்தான் ;மலையக மக்கள் முன்னணியும் தந்தையும் நீங்களும் கஸட்டப்பட்டு அடி உதை வாங்கி உருவாக்கினீர்கள். மக்களுக்காக சேவை செய்து தர வேண்டும்.ஆனால் இன்று இளைஞர்களுக்கு வேலையில்லை யுவதிகளுக்கு வேலையில்லை இளைஞர்கள் மிகவும் கஸட்டப்படுகிறார்கள் அப்படி என்றால் 1990 ஆண்டு இதை ஆரம்பித்ததில் அர்த்தம் என்ன?இன்றைய இளைஞர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்று தானே கட்சியினை ஆரம்பித்தீர்கள.; இன்று அப்படி இல்லை. காரணம் தலைமைத்துவம் சரியில்லை நீங்கள் கஸட்டப்பட்டு வளர்;த்தெடுத்த கட்சி வியாபாரம் செய்வதாக சுயேற்சை குழு வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணி ஸ்தாபகரின் புதல்வியுமான அனுசியா சந்திரசேகரன் தெரிவித்தார்.
நேற்று (29) வட்டவனை மௌன்ஜீன் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ..
வேலை வாயப்புக்கள் இல்;லை என்று நீங்கள் நினைக்கிறீளா அரசாங்கம் அன்று போல் இன்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கிறது. ஆனால் அந்த தொழில் எதுவுமே எமது மக்களை போய் சென்றடைவதில்லை. அவற்றில் வியாபாரம் நடக்கின்றன.இன்றுள்ள அமைச்சர் அவர்கள் அவரால் அரச நியமனங்களை பெற்றுத்தர முடியாது. கல்வி அமைச்சராக இருந்து கொண்டு கூட ஆசிரியர் நியமன்கள் பெற்றுத்தர முடியாது. என்றால் அவரால் ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நியமனம் பெற்றுத்தர எப்படி முடிந்தது.? இதனை எதிர்த்து கேள்வி கேட்டு; மண்வெட்டி சின்னத்தை எடுப்போம் தனித்து நின்று போட்டியிட்டு அரசாங்கத்திடம் கேட்போம் என்றால் மண்வெட்டியை எடுக்க மறுக்கிறார்கள் அப்படி மண்வெட்டி வந்தால் தனித்து அடையாளப்படுத்தப்படும்; அவ்வாறு தனித்துவ அடையாளப்படுத்தப்பட்டால் மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்படும். எனவே தான் அவர்கள் மண்வெட்டி சின்னத்தினை எடுக்க மறுக்கிறார்கள் மலையக மக்கள் மக்கள் என்றால் அதிகமானவர்கள் நினைப்பது அவர்கள் இந்தியவிலிருந்து வந்தவர்கள்,பிரஜா உரிமை இருக்காது வாக்குரிமை இருக்காது,தேசிய அடையாள அட்டை இருக்காது என்று நினைத்தார்கள் ஆனாலஅப்படி பட்ட மலையக மக்கள் முனனணிதான் 1994 ஆண்டு ஆட்சியையே மாற்றியது.

ஆகவே இது மாற வேண்டும் ஒரு தொழிற்சாலை மூடியிருந்தால் 30 வருடமாக மூடிதான் இருக்க வேண்டுமா? அதில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்து முடியாதா?எனது தந்தை இறந்து 10 வருடம் ஆகின்றது யாராவது வந்து பார்த்து அந்த தொழிற்சாலைகளை திறந்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கியிருக்க வேண்டும்.நினைத்தார்களா? பெண்கள் இன்று தோட்டத்தொழிலாளர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆயிரம் ரூபா மற்றும் பிரச்சினையல்ல தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். குளவி கொட்டினாலோ,அட்டை கடித்தாலோ.சிறுத்தை கடித்தாலோ அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும்.200, 300 ஆண்டுகள் வாழ்கிறோம் நமகென்று சொந்த பூமி கூட கிடையாது. சமூரத்தி பெற வேண்டும் எனறாலும் நாம் இரண்டு மூன்று நாட்கள் அலகழித்துவிட்டு தான் கொடுக்கிறார்கள் எம்மை மறியாதை குறைவாகவே நடத்துகிறார்கள.; இவற்றிக்கெல்லாம் முடிவு காண வேண்டும்.

எனது தந்தை விவசாய தேவையிருந்ததன் காரணமாக மண்வெட்டியை கையில் எடுத்தார். அவரின் மகளான நான் கோடரியை கையில் எடுத்தேன் அதில் முதன் முதலில் சில தேவையற்ற மரங்களை வெட்டி எறிய வேண்டியுள்ளது.உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹட்டன் கே. சுந்தரலிங்கம்

 390 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!