வரலாற்று வெற்றியில் இணைய களுத்துறை இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு – சண் பிரபா

வரலாற்று வெற்றியில் இணைய களுத்துறை இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு – சண் பிரபா

களுத்துறை மாவட்ட அரசியல் வரலாற்றில் தமிழ் வேட்பாளர் ஒருவருக்காக முதன் முறையாக கிடைத்திருக்கும் ஆதரவழை இதுவே. இந்த வரலாற்று வெற்றியில் இணைந்துகொள்ளுமாறு இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் (இல.12) களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் சண் பிரபா.

ஐக்கிய தேசியக்கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிடும் களுத்துறை மாவட்ட தமிழ் வேட்பாளர் சண்.பிரபாவுக்கான ஆதரவு கூட்டம் புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் புளத்சிங்கள நகரத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

எனது வெற்றி இம்மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதை நான் உறுதியாக கூறுவேன். ஏனெனில், இம்மாவட்டத்தில் உள்ள பல தோட்டப்பகுதிகளுக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அத்தோட்டத் தமிழ் மக்கள் தமக்கு தமிழ் வேட்பாளர் ஒருவர் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதியொருவர் எமக்கு கிடைக்க வேண்டும் என்பதே எமது நீண்ட நாள் ஆசை
இவ்வளவு நாள் நாங்கள் எதிர்ப்பார்த்திருந்த எண்ணம் நிறைவேறியது. அதற்கு தகுந்த பொருத்தமான தமிழ் வேட்பாளர் ஒருவரையே எமது மாவட்டத்திற்கு நியமித்திருப்பது பெரும் மகிழ்ச்சி. நாங்கள் இச்சந்தர்ப்பத்தை தவறவிடாது பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என்று நான் சந்தித்த மக்கள் மனமுவந்து என்னிடம் கூறியது பெரும் மகிழ்ச்சி. அத்துடன் சுமார் 26 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பிரதிநதியொருவர் இல்லாதிருந்தமையால் தாங்கள் எந்தவகையில் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருந்தோம் எனவும் அம்மக்கள் தெரிவித்தனர்.

ஆகவே, இந்த வரலாற்று வெற்றிப்பயணத்தில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த வெளிமாவட்டங்களில் தொழில் புரியும் இளைஞர், யுவதிகள் இப்பயணத்தில் கலந்து கொண்டு ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்வதுடன் எமது உரிமைசார் விடயங்களிலும் முன்னோக்கி நகர்வோம் என்றும் குறிப்பிட்டார்.

 

நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா

 182 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!