சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்-  உதயகுமார் தெரிவிப்பு.

சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் போது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்- உதயகுமார் தெரிவிப்பு.

நான் என்று சிந்திப்பதை விட நாம் என்று சிந்திக்க வேண்டும். நான் என்பது வெறும் ஒரு வேட்பாளர் மட்டும் தான். ஆனால் நாம் எனும் போது அதில் சமூகமும் அடங்கியுள்ளது. சமூகம் எப்போதும் வெற்றிப்பெற வேண்டும். சமூகத்திற்கு எவரும் தீங்கிளைக்கும் போதும் சமூகத்திற்கு துரோகம் மேற்கொள்ளும் போதும் நாம் அனைவரும் ஒன்று கூட வேண்டும். இந்த தேர்தல் நுவரெலியா மாவட்டத்தை பொருத்த வரையில் சமூகத்திற்கு அநீதி இளைப்பதற்காக பலர் களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஒரு சிலர் தூண்டுதலாலும் இன்னும் சிலர் பிற்புலாத்தில் இருந்து கொண்டும் இவர்களை இயக்குகிறார்கள். ஆகவே மலையகத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள், தெரியாதவர்கள், சேவை செய்யாதவர்கள் ஆகியோருக்கு வாக்களித்து உங்கள் பொன்னான வாக்குகளை வீணாக்க வேண்டாம். உங்களுக்கு தெரிந்த மக்களோடு மக்களாக இருக்கின்ற மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களை தெரிவு செய்ய வேண்டும். என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார். நேற்று மாலை நுவரெலியா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..

தமிழ் முற்கோக்கு கூட்டணி கடந்த காலங்களில் பல சாதனைகளை படைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்று அமைச்சர்களையும், ஆறு உறுப்பினர்களையும் பல பிரதேசசைப உறுப்பினர்களையும் உருவாக்கியுள்ளது அது மட்டும் அல்லாமல் மக்களுக்கு பல சேவைகளை செய்துள்ளது. பல வருடங்களாக அமைச்சர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்து மாற்ற முடியாத அடிமை சாசனமாக காணப்பட்ட பிரதேச சபை சட்டங்களை மாற்றி தோட்டங்களில் பிரதேச சபை வேலை செய்வதற்கான திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதிக மக்கள் வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகள் மாத்திரமே காணப்பட்டன. அதனை ஆறாக உயர்த்தியுள்ளது. இன்று இந்த பிரதேசபைகளில் நாம் வெற்றி பெற்றாலும் கூட குழுக்கள் முறை காரணமாக மாற்றம் பெற்றுள்ளது. மக்கள் தெரிவு செய்த பிரதேசபைகளை விளையாட்டு போட்டியினை போல் குழுக்கள் முறையில் தெரிவு செய்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறு பிரதேசசபைகளை கைப்பற்றியவர்கள். இன்று என்ன செய்திருக்கிறார்கள். சற்று சிந்தித்து பாருங்கள் அந்த பிரசேத்தின் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துள்ளதா? ஓட்டு வாங்கியது யாரோ? அட்சி செய்வது யாரோ? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் என்ன பயன் வேலை செய்ய முடியாதவர்களிடம் அதிகாரம் போவதனால் எவ்வித பயனுமில்லை. என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும. பிரதேசத்தை கூட அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் பாராளுமன்றம் சென்று எவ்வாறு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப்போகிறார்கள். என்பதனை, புறிந்து கொண்டு மக்களுடன் இருக்கின்ற மக்களுக்காக சேவையாற்றுகின்றவர்களை தெரிவு செய்வதன் மூலம் மக்கள் சிறந்த பயனை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் 

 250 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!